Stock News: துளிர்க்கும் நம்பிக்கை - இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம்!

12:24 PM May 21, 2026 | Jai s

கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றம் நிலவி வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 21) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 327.74 புள்ளிகள் உயர்ந்து 75,646.13 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 111.75 புள்ளிகள் உயர்ந்து 23,772.05 ஆக இருந்தது.

“மேற்கு ஆசிய மோதல்கள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை சற்றே சரிந்துள்ளதும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் எழுச்சி பெற வழிவகுத்துள்ளன.” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் எல் அண்ட் டி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், அதானி போர்ட்ஸ், எடர்னல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. என்டிபிசி, சன் பார்மா, டிசிஎஸ், டைடன் கம்பெனி, எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 140.50 புள்ளிகள் உயர்ந்து 75,458.89 ஆகவும், நிஃப்டி 78.45 புள்ளிகள் உயர்ந்து 23,737.45 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான சூழல் நிலவுகிறது. மேற்கு ஆசிய மோதல்கள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை சற்றே சரிந்துள்ளதும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் எழுச்சி பெற வழிவகுத்துள்ளன.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

எல் அண்ட் டி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

அதானி போர்ட்ஸ்

எடர்னல்

டாடா ஸ்டீல்

ஐசிஐசிஐ பேங்க்

ஆக்சிஸ் பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

மாருதி சுசுகி

இண்டஸ்இண்ட் பேங்க்

அதானி போர்ட்ஸ்

டாடா மோட்டார்ஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐடிசி

பாரதி ஏர்டெல்

எஸ்பிஐ

கோடக் மஹிந்திரா பேங்க்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

என்டிபிசி

சன் பார்மா

டிசிஎஸ்

டைடன் கம்பெனி

எம் அண்ட் எம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

இன்போசிஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

நெஸ்லே இந்தியா

டெக் மஹிந்திரா

இந்துஸ்தான் யூனிலீவர்

பஜாஜ் ஃபைனான்ஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.27 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan