+

Stock News: பங்குச் சந்தையில் ஏற்றமும் இறக்கமுமாக நீடிக்கிறது தடுமாற்றம்!

மேற்கு ஆசிய போர் பதற்றம் நீடிப்பு, வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு, சர்வதேச சந்தைகளின் போக்கு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிக்கிறது.

வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தையில் ஏற்றமும் இறக்கமுமாக தடுமாற்றம் நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 229.69 புள்ளிகள் சரிந்து 74,139.32 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 66.30 புள்ளிகள் சரிந்து 23,339 ஆக இருந்தது. பின்னர் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது.

“மேற்கு ஆசிய போர் பதற்றம் நீடிப்பு, வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு, சர்வதேச சந்தைகளின் போக்கு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய பிற்பகல் வர்த்தகத்தில் எடர்னல், டைடன் கம்பெனி, மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று பிற்பகல் 12.20 மணியளவில் சென்செக்ஸ் 87.54 புள்ளிகள் உயர்ந்து 74,433.71 ஆகவும், நிஃப்டி 27.50 புள்ளிகள் உயர்ந்து 23,433.10 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் தடுமாற்றம் நிலவுகிறது. மேற்கு ஆசிய போர் பதற்றம் நீடிப்பு, வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு, சர்வதேச சந்தைகளின் போக்கு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிக்கிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

எடர்னல்

டைடன் கம்பெனி

மாருதி சுசுகி

டெக் மஹிந்திரா

ஐசிஐசிஐ பேங்க்

ஐடிசி

எஸ்பிஐ

எம் அண்ட் எம்

இந்துஸ்தான் யூனிலீவர்

ஏசியன் பெயின்ட்ஸ்

என்டிபிசி

எல் அண்ட் டி

நெஸ்லே இந்தியா

டாடா ஸ்டீல்

அதானி போர்ட்ஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

கோடக் மஹிந்திரா பேங்க்

இண்டஸ்ட்இண்ட் பேங்க்

ஆக்சிஸ் பேங்க்

டாடா மோட்டார்ஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

டிசிஎஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

பாரதி ஏர்டெல்

சன் பார்மா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

இன்போசிஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.68 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter