சர்வதேச சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 332.39 புள்ளிகள் உயர்ந்து 75,507.09 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 84.60 புள்ளிகள் உயர்ந்து 23,747.40 ஆக இருந்தது.
“அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை முன்னேற்றம், கச்சா எண்ணெய் விலை குறைவு, சர்வதேச சந்தைகளின் சாதகப் போக்கு உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. இன்போசிஸ், டைடன் கம்பெனி, என்டிபிசி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 481.80 புள்ளிகள் உயர்ந்து 75,665.16 ஆகவும், நிஃப்டி 125.40 புள்ளிகள் உயர்ந்து 23,780.10 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் நிலவுகிறது. அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை முன்னேற்றம், கச்சா எண்ணெய் விலை குறைவு, சர்வதேச சந்தைகளின் சாதகப் போக்கு உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா ஸ்டீல்
இந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டெக் மஹிந்திரா
நெஸ்லே இந்தியா
பஜாஜ் ஃபின்சர்வ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எடர்னல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஆக்சிஸ் பேங்க்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
எல் அண்ட் டி
டிசிஎஸ்
மாருதி சுசுகி
எஸ்பிஐ
கோடக் மஹிந்திரா பேங்க்
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
டைடன் கம்பெனி
என்டிபிசி
அதானி போர்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பாரதி ஏர்டெல்
சன் பார்மா
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஐடிசி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.15 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan