+

Stock News: கச்சா எண்ணெய் தாக்கம் - சென்செக்ஸ் 900+ புள்ளிகள் சரிவு!

மேற்கு ஆசிய போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடு வரத்து சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.

கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தையிலும் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 699.74 புள்ளிகள் சரிந்து 73,959.48 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 177.40 புள்ளிகள் சரிந்து 23,302.50 ஆக இருந்தது.

“மேற்கு ஆசிய போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடு வரத்து சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் மாருதி சுசுகி, பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்தன.

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 926.23 புள்ளிகள் சரிந்து 73,723.62 ஆகவும், நிஃப்டி 265.15 புள்ளிகள் சரிந்து 23,218.40 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகப் போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசிய போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடு வரத்து சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

மாருதி சுசுகி

பாரதி ஏர்டெல்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

டிசிஎஸ்

இன்போசிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

டெக் மஹிந்திரா

எம் அண்ட் எம்

எடர்னல்

இண்டஸ்இண்ட் பேங்க்

ஐடிசி

ஏசியன் பெயின்ட்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

அதானி போர்ட்ஸ்

நெஸ்லே இந்தியா

எல் அண்ட் டி

எஸ்பிஐ

என்டிபிசி

டைடன் கம்பெனி

பாரதி ஏர்டெல்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ஐசிஐசிஐ பேங்க்

டாடா ஸ்டீல்

பஜாஜ் ஃபைனான்ஸ்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ஆக்சிஸ் பேங்க்

டாடா மோட்டார்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

சன் பார்மா

கோடக் மஹிந்திரா பேங்க்

இந்துஸ்தான் யூனிலீவர்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.79 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter