+

Msme நிறுவனங்களை பங்குச் சந்தைக்கு கொண்டு செல்ல மீஷோ–பிஎஸ்இ கூட்டணி!

இ-காமர்ஸ் தளமான மீஷோ மற்றும் பிஎஸ்இ இணைந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் டிஜிட்டல் வணிகங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மாற்றுவதற்கான புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளன. ‘ப்ராஜெக்ட் ஷிகர்’ (Project Shikhar) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத

இ-காமர்ஸ் தளமான மீஷோ மற்றும் பிஎஸ்இ இணைந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் டிஜிட்டல் வணிகங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மாற்றுவதற்கான புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளன.

‘ப்ராஜெக்ட் ஷிகர்’ (Project Shikhar) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்காக இரு தரப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், சிறப்பாக செயல்பட்டு வரும் சுயாதீன இ-காமர்ஸ் விற்பனையாளர்கள் பிஎஸ்இ, எஸ்எம்இ (SME) தளத்தில் பட்டியலிடப்படுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டு மூலதனத்தை திரட்டுவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.

பிஎஸ்இ நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுந்தர் ராமன் ராமமூர்த்தி கூறுகையில்,

“வேகமாக வளர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மூலதன சந்தையை நேரடியாக அணுகும் வாய்ப்பை வழங்குவதற்காக பிஎஸ்இ எஸ்எம்இ தளத்தை முன்னோடியாக அறிமுகப்படுத்தியது. பல ஆண்டுகளாக இந்த தளம் நூற்றுக்கணக்கான எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு வளர்ச்சி மூலதனத்தை திரட்டவும், நிர்வாகத் தரநிலைகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது. மீஷோ உடனான இந்த கூட்டணி, டிஜிட்டல் தளங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தொழில்முனைவோர்களையும் அந்த அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றி, இ-காமர்ஸ் விற்பனையாளர்களை பொதுப் பங்கு நிறுவனங்களாக உருவாக்க உதவும்,” என்றார்.
meesho

இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க பகுதி இன்னும் அமைப்புசாரா துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்கள் விரிவாக்கத்திற்குத் தேவையான பாரம்பரிய நிதி ஆதாரங்களைப் பெறுவதில் பல தடைகளை சந்தித்து வருகின்றன. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில், பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான தெளிவான மற்றும் படிப்படியான வழிகாட்டுதலை ‘ப்ராஜெக்ட் ஷிகர்’ வழங்கும், என மீஷோ தெரிவித்துள்ளது.

அடுத்த ஒரு ஆண்டுக்குள், தகுதியான விற்பனையாளர்களைத் தேர்வு செய்து திட்டத்தில் இணைப்பதுடன், நிறுவன வடிவமைப்பு மாற்றம், ஒழுங்குமுறை இணக்கத்தன்மை கண்காணிப்பு மற்றும் பங்குச் சந்தை பட்டியலிடலுக்குத் தேவையான விதிமுறை சார்ந்த தயாரிப்புகள் ஆகியவற்றிலும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.

மீஷோ நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவு தலைவரான லோபமுத்ர ராவ் கூறுகையில்,

“எங்கள் விற்பனையாளர் அமைப்பில் பெரும்பாலானோர் வேகமாக வளர்ந்த தொழில்முனைவு நிறுவனங்களாக உள்ளனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குத் தயாரான நிறுவனங்களாக மாறுவது சிக்கலான செயல்முறையாக உள்ளது. ‘ப்ராஜெக்ட் ஷிகர்’ அந்தச் சிக்கல்களை நீக்குகிறது. பிஎஸ்இ உடனான இந்த கூட்டணியின் மூலம், விற்பனையாளர்கள் பொதுமக்களிடமிருந்து மூலதனம் திரட்டுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், இந்தியாவின் ஒழுங்குபடுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வெளிப்படையான மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க செயல்படும் நிறுவனங்களின் வலுவான அடித்தளத்தையும் உருவாக்குகிறோம்,” என்றார்.
facebook twitter