
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வி கண்டதன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,613.09 புள்ளிகள் சரிந்து 75,937.16 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 495 புள்ளிகள் சரிந்து 23,555.60 ஆக இருந்தது.
“பாகிஸ்தானில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், மீண்டும் போர் பதற்றம் கூடியுள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி நிலவுகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் என்டிபிசி, எடர்னல் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன. ஏனைய நிறுவனப் பங்குகள் அனைத்துமே சரிவை சந்தித்தன.
இன்று காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 1,048.62 புள்ளிகள் சரிந்து 76,501.63 ஆகவும், நிஃப்டி 301.65 புள்ளிகள் சரிந்து 23,748.95 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆனால், ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் என அனைத்திலும் பாதகப் போக்கு நிலவுகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், மீண்டும் போர் பதற்றம் கூடியுள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி நிலவுகிறது
ஏறுமுகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
எடர்னல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
ஐடிசி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டைடன் கம்பெனி
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எஸ்பிஐ
இண்டஸ்இண்ட் பேங்க்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
டெக் மஹிந்திரா
இந்துஸ்தான் யூனிலீவர்
நெஸ்லே இந்தியா
அதானி போர்ட்ஸ்
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
சன் பார்மா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.93.36 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan