Stock News: பங்குச் சந்தையில் வீழ்ச்சி நீடிப்பு - சென்செக்ஸ் 400+ புள்ளிகள் சரிவு!

11:28 AM Jan 12, 2026 | Jai s

கடந்த வாரத்தின் இறுதியைப் போலவே இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.12) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 455.35 புள்ளிகள் சரிந்து 83,120.89 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 135.35 புள்ளிகள் சரிந்து 25,547.95 ஆக இருந்தது.

“ரஷ்​யா​விட​ம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடு​கள் மீது 500% வரி விதிக்க வகை செய்​யும் மசோ​தாவுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நீடிக்கிறது,” என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளன. ஏனைய பல நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 436.02 புள்ளிகள் சரிந்து 83,140.23 ஆகவும், நிஃப்டி 126.35 புள்ளிகள் சரிந்து 25,556.95 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், தென் கொரியாவில் ஏற்றமும், ஹாங்காங்கில் சரிவும் நிலவுகிறது. ரஷ்​யா​விட​ம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடு​கள் மீது 500% வரி விதிக்க வகை செய்​யும் மசோ​தாவுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நீடிக்கிறது

ஏற்றம் காணும் பங்குகள்:

டாடா ஸ்டீல்

இண்டஸ் இண்ட் பேங்க்

என்டிபிசி

ஏசியன் பெயின்ட்ஸ்

ஐடிசி

ஐசிஐசிஐ பேங்க்

இந்துஸ்தான் யூனிலீவர்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

எடர்னல் லிட்

அதானி போர்ட்ஸ்

எஸ்பிஐ

டெக் மஹிந்திரா

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

பஜாஜ் ஃபைனான்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

நெஸ்லே இந்தியா

ஹெச்டிஎஃப்சி பேங்க்

டாடா மோட்டாரஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

சன் பார்மா

பாரதி ஏர்டெல்

டிசிஎஸ்

டைடன் கம்பெனி

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ஆக்சிஸ் பேங்க்

மாருதி சுசுகி

எல் அண்ட் டி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இன்போசிஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

எம் அண்ட் எம்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.20 ஆக இருந்தது.""


Edited by Induja Raghunathan