+

Stock News: கச்சா எண்ணெய் தாக்கம் - இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம்...

மீண்டும் வலுத்துள்ள ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் தடுமாற்றம் நிலவி வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 20) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 517.11 புள்ளிகள் சரிந்து 74,667.51 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 152.45 புள்ளிகள் சரிந்து 23,475.80 ஆக இருந்தது.

“மீண்டும் வலுத்துள்ள ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் பேங்க், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 4.46 புள்ளிகள் சரிந்து 75,196.39 ஆகவும், நிஃப்டி 5.60 புள்ளிகள் உயர்ந்து 23,623.60 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் தடுமாற்றமே நிலவுகிறது. மீண்டும் வலுத்துள்ள ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆக்சிஸ் பேங்க்

எம் அண்ட் எம்

டாடா மோட்டார்ஸ்

எல் அண்ட் டி

டிசிஎஸ்

அதானி போர்ட்ஸ்

மாருதி சுசுகி

எஸ்பிஐ

கோடக் மஹிந்திரா பேங்க்

எஸ்பிஐ

சன் பார்மா

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஐடிசி

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

டாடா ஸ்டீல்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இந்துஸ்தான் யூனிலீவர்

பஜாஜ் ஃபைனான்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

என்டிபிசி

டெக் மஹிந்திரா

நெஸ்லே இந்தியா

இன்போசிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

பாரதி ஏர்டெல்

பஜாஜ் ஃபின்சர்வ்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எடர்னல்

டைடன் கம்பெனி

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.80 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter