சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் எதிர்மறைப் போக்கின் தாக்கத்தால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நெகட்டிவ் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (நவ.21) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 285.28 புள்ளிகள் சரிந்து 85,347.40 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 82.6 புள்ளிகள் சரிந்து 26,109.55 ஆக இருந்தது.
“அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இதுவே, இந்திய பங்குச் சந்தைகளிலும் இன்றைய தினம் எதிரொலித்து வருகிறது,” என்று தொழில் முதலீட்டு வல்லுநர் வி.கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் எம் அண்ட் எம், மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. என்டிபிசி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், எடர்னல் லிட், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.40 மணியளவில் சென்செக்ஸ் 180.37 புள்ளிகள் சரிந்து 85,452.31 ஆகவும், நிஃப்டி 45.50 புள்ளிகள் சரிந்து 26,146.65 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தற்போது தென் கொரியா, ஹாங்காங், ஜப்பான் மற்றும் ஷாங்காய் என அனைத்திலும் சரிவுப் போக்கே காணப்படுகிறது. இதன் தாக்கத்துடன், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
எம் அண்ட் எம்
மாருதி சுசுகி
டாடா மோட்டார்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
இன்போசிஸ்
டெக் மஹிந்திரா
ஐடிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டிசிஎஸ்
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
பாரதி ஏர்டெல்
நெஸ்லே இந்தியா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
என்டிபிசி
எல் அண்ட் டி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஆக்சிஸ் பேங்க்
எஸ்பிஐ
அதானி போர்ட்ஸ்
எடர்னல் லிட்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.61 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan