
வாரத்தின் தொடக்க நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் சற்றே மீண்டெழுந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (நவ.24) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 218.44 புள்ளிகள் உயர்ந்து 85,450.36 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 69.4 புள்ளிகள் உயர்ந்து 26,137.55 ஆக இருந்தது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவும் சூழலில், ஐடி நிறுவனப் பங்குகள் மற்றும் வங்கி நிறுவனப் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுவதாக வர்த்தக நிபுணர்கள் கூறினர்.
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோடக் மஹிந்திரா பேங்க், எஸ்பிஐ, ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிந்தன. சன் ஃபார்மா, நெஸ்லே இந்தியா, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 87.39 புள்ளிகள் உயர்ந்து 85,319.31 ஆகவும், நிஃப்டி 19.30 புள்ளிகள் உயர்ந்து 26,087.45 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தற்போது தென் கொரியா, ஹாங்காங், ஜப்பானில் ஏற்றமும், ஷாங்காயில் சரிவும் நிலவுகிறது. ஐடி நிறுவனப் பங்குகள் மற்றும் வங்கி நிறுவனப் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுவதாக வர்த்தக நிபுணர்கள் கூறினர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டிசிஎஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
மாருதி சுசுகி
எடர்னல் லிட்
அதானி போர்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
சன் பார்மா
நெஸ்லே இந்தியா
எல் அண்ட் டி
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
இந்துஸ்தான் யூனிலீவர்
டைடன் கம்பெனி
என்டிபிசி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ஐடிசி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எம் அண்ட் எம்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.21 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan