+

Stock News: இந்திய பங்குச் சந்தையில் சரிவுக்குப் பின் மீட்சி - காரணம் என்ன?

சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு காரணமாக சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பாசிட்டிவ் மோடுக்குச் செல்ல வழிவகுத்தன என்று வர்த்தக நிபுணர்கள் கூறினர்.

வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் பின்னர் மீண்டெழத் தொடங்கியது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (நவ.25) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 124.95 புள்ளிகள் சரிந்து 84,775.76 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 35.35 புள்ளிகள் சரிந்து 25,924.15 ஆக இருந்தது.

வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைந்ததால் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு காரணமாக சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பாசிட்டிவ் மோடுக்குச் செல்ல வழிவகுத்தன என்று வர்த்தக நிபுணர்கள் கூறினர்.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றத்தையும், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், எடர்னல் லிட் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவையும் சந்தித்தன.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 148.90 புள்ளிகள் உயர்ந்து 85,049.61 ஆகவும், நிஃப்டி 43.05 புள்ளிகள் உயர்ந்து 26,002.55 ஆகவும் இருந்தது.
sensex

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தற்போது தென் கொரியா, ஹாங்காங், ஜப்பான், ஷாங்காய் என அனைத்திலும் ஏற்றம் நிலவுகிறது. இந்த சாதகப் போக்கின் தாக்கத்தால் தடுமாற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தையும் சற்றே மீண்டுள்ளது.


ஏற்றம் காணும் பங்குகள்:

எஸ்பிஐ

எல் அண்ட் டி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பாரதி ஏர்டெல்

பஜாஜ் ஃபின்சர்வ்

டாடா ஸ்டீல்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

என்டிபிசி

சன் பார்மா

நெஸ்லே இந்தியா

மாருதி சுசுகி

டெக் மஹிந்திரா

ஆக்சிஸ் பேங்க்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

இன்போசிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

டிசிஎஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

கோடக் மஹிந்திரா பேங்க்

எடர்னல் லிட்

அதானி போர்ட்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

இந்துஸ்தான் யூனிலீவர்

டைடன் கம்பெனி

பஜாஜ் ஃபைனான்ஸ்

டாடா மோட்டார்ஸ்

ஐடிசி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

எம் அண்ட் எம்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.24 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter