+

Stock News: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு - பங்குச்சந்தை எழுச்சிக்கு என்ன காரணம்?

அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்றம், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நிலவுவதாக வர்த்தக நிபுணர்கள் கூறினர்.

கடந்த சில தினங்களாகவே சரிவுப் போக்கை சந்தித்து வந்த மும்பை மற்றும் இந்திய பங்குச் சந்தையில் இன்று மகத்தான எழுச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,000 புள்ளிகள் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (நவ.25) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 307.93 புள்ளிகள் உயர்ந்து 84,775.76 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 93.5 புள்ளிகள் உயர்ந்து 25,978.30 ஆக இருந்தது.

அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்றம், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நிலவுவதாக வர்த்தக நிபுணர்கள் கூறினர்.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் பாரதி ஏர்டெல் பங்குகளைத் தவிர மற்ற அனைத்து நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன.

இன்று பிற்பகல் 1.15 மணியளவில் சென்செக்ஸ் 979.45 புள்ளிகள் உயர்ந்து 85,566.45 ஆகவும், நிஃப்டி 299.95 புள்ளிகள் உயர்ந்து 26,184.75 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தற்போது தென் கொரியா, ஹாங்காங், ஜப்பான், ஷாங்காய் என அனைத்திலும் ஏற்றம் நிலவுகிறது. இந்த சாதகப் போக்கின் காரணமாகவும், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து திடீரென கூடியதன் விளைவாகவும் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்தன.

ஏற்றம் காணும் பங்குகள்:

எஸ்பிஐ

எல் அண்ட் டி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

டாடா ஸ்டீல்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

என்டிபிசி

சன் பார்மா

நெஸ்லே இந்தியா

மாருதி சுசுகி

டெக் மஹிந்திரா

ஆக்சிஸ் பேங்க்

இன்போசிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

டிசிஎஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

கோடக் மஹிந்திரா பேங்க்

எடர்னல் லிட்

அதானி போர்ட்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

இந்துஸ்தான் யூனிலீவர்

டைடன் கம்பெனி

பஜாஜ் ஃபைனான்ஸ்

டாடா மோட்டார்ஸ்

ஐடிசி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

எம் அண்ட் எம்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

பாரதி ஏர்டெல்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.26 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter