Stock News: சென்செக்ஸ் 300 புள்ளிகள்; நிஃப்டி 100 புள்ளிகள் உயர்வு - லாபத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை!

12:21 PM Mar 27, 2025 | Gajalakshmi Mahalingam

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 27) காலை வர்த்தகம் லாபத்துடன் முதலீட்டாளர்களுக்கு ஒரு நேர்மறை ஆரம்பத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 210.78 புள்ளிகள் உயர்ந்து 77,499.28 புள்ளிகளாக ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 62.75 புள்ளிகள் உயர்ந்து 23,549.60 புள்ளிகளாகவும் இருந்தது.

இன்று காலை 12 மணியளவில் சென்செக்ஸ் 326.22 புள்ளிகள் (0.42%) உயர்ந்து 77,614.72 ஆகவும், நிஃப்டி 100.15 புள்ளிகள் (0.43%) உயர்ந்து 23,587 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 2ம் தேதி முதல் ஆட்டோ இறக்குமதிக்கு 25% வரியை அமல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த வரிகள் "நிரந்தரமானவை" என்றும், விதிவிலக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க-இந்தியா வர்த்தக சந்திப்பு புதன்கிழமை தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் உள்ளனர்.

ஏற்றம் காணும் பங்குகள்:

ஹீரோ மோட்டோ கார்ப்

எச்டிஎஃப்சி லைப் இன்சூரன்ஸ்

லார்சன் & டர்போ

விப்ரோ

கோல் இந்தியா

பிபிசிஎல்

பஜாஜ் ஃபின்சர்வ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

ஆக்சிஸ் வங்கி

டாடா கன்சியூமர் ப்ராடக்ட்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

டாடா மோட்டார்ஸ்

சன் ஃபார்மா இன்டஸ்ட்ரீஸ்

டாக்டர். ரெட்டிஸ் லேப்

எச்சிஎல் டெக்னாலஜிஸ்

அதானி என்டர்பிரைசஸ்

அப்பலோ ஹாஸ்பிடல்ஸ்

பார்தி ஏர்டெல்

டாடா ஸ்டீல்

எஃகர் மோட்டர்ஸ்

ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.78 ஆக உள்ளது.