இந்திய பங்குச் சந்தையில் இன்று மீண்டும் மீட்சிப் போக்கு நிலவுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 535.33 புள்ளிகள் உயர்ந்து 77,166.98 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 177.15 புள்ளிகள் உயர்ந்து 23,952.25 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றத்தின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையிலும் மீட்சிப் போக்கு நிலவுகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் இந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, அதானி போர்ட்ஸ், இன்போசிஸ் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவை சந்தித்தன. ஏனைய பெரும்பாலான நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன.
இன்று காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 568.32 புள்ளிகள் உயர்ந்து 77,199.97 ஆகவும், நிஃப்டி 166.00 புள்ளிகள் உயர்ந்து 23,941.10 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆனால், ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் என அனைத்திலும் சாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றத்தின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையிலும் மீட்சிப் போக்கு நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
டிசிஎஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
ஐடிசி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
எடர்னல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டைடன் கம்பெனி
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எஸ்பிஐ
இண்டஸ்இண்ட் பேங்க்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
டெக் மஹிந்திரா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இந்துஸ்தான் யூனிலீவர்
நெஸ்லே இந்தியா
அதானி போர்ட்ஸ்
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
சன் பார்மா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.73 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan