அமெரிக்க பங்குச் சந்தையின் ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து உயர்வுப் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஆக.14) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 154.07 புள்ளிகள் உயர்ந்து 80,693.98 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 24,664.35 ஆக இருந்தது.
இந்திய பங்குச் சந்தை வரத்தகத்தில் தொடர்ந்து பச்சை விளக்கு ஒளிர்வது முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இன்போசிஸ், எடர்னல் லிட், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க், டைடன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் எழுச்சி கண்டுள்ளன.
அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 120.73 புள்ளிகள் உயர்ந்து 80,660.63 ஆகவும், நிஃப்டி 29.65 புள்ளிகள் உயர்ந்து 24,649.00 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காயில் மட்டும் ஏற்றம் நிலவுகிறது. டோக்கியோ, சியோல் மற்றும் ஹாங்காங்கில் சரிவு நிலவுகிறது. சர்வதேசப் போக்குடன் உள்ளூர் முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் தொடர்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
எடர்னல் லிட்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
எஸ்பிஐ
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஐசிஐசிஐ பேங்க்
டைடன் கம்பெனி
இந்துஸ்தான் யூனிலீவர்
பாரதி ஏர்டெல்
ஏசியன் பெயின்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கோடக் மஹிந்திரா
பஜாஜ் ஃபைனான்ஸ்
மாருதி சுசுகி
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
டாடா ஸ்டீல்
என்டிபிசி
சன் பார்மா
எல் அண்ட் டி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
டிசிஎஸ்
ஆக்சிஸ் பேங்க்
அதானி போர்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
ஐடிசி
இண்டஸ்இண்ட் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே குறைந்து ரூ.87.48 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan