சர்வதேச பங்குச் சந்தைகளின் பாதகமான போக்குகள், வெளிநாட்டு முதலீடுகளில் சரிவு முதலான காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவி பின்னர் எழுச்சி ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.30) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 142.26 புள்ளிகள் சரிந்து 78,556.81 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 48.35 புள்ளிகள் சரிந்து 23,765.05 ஆக இருந்தது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குச் சந்தை வர்த்தகத்தில் தடுமாற்றம் நிலவி வருவது, முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 235.15 புள்ளிகள் (0.30%) உயர்ந்து 78,934.22 ஆகவும், நிஃப்டி 43.55 புள்ளிகள் (0.18%) உயர்ந்து 23,856.95 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் பாதக நிலையுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஹாங்காங் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சியோல் பங்குச் சந்தை மட்டும் ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேசப் போக்குடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாததன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் பாதக நிலை ஏற்பட்டது. பின்னர், உள்ளூர் முதலீட்டாளர்களின் செயல்பாடுகளால் பங்குச் சந்தைக் குறியீட்டெண் ஏற்றம் பெறத் தொடங்கியது.
ஏற்றம் காணும் பங்குகள்:
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
இண்டஸ்இன்ட் பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
பாரதி ஏர்டெல்
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐடிசி
எல் அண்ட் டி
டைட்டன் கம்பெனி
மாருதி சுசுகி
டாடா ஸ்டீல்
டிசிஎஸ்
இன்ஃ;போசிஸ்
விப்ரோ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்து ரூ.85.53 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan