+

வீட்டு வாசலில் பிரிண்ட்-அவுட் - 'Instaprint' சேவையை அறிமுகப்படுத்தியது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்!

இந்தியாவின் முன்னணி துரித வர்த்தகத் தளமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) தற்போது மளிகைப்பொருட்கள் அல்லாத பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்யும் விதமாக புதிய பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. Instaprint' என பெயரிடப்பட்ட இந்த வசதி, தற்போது பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆ

இந்தியாவின் முன்னணி துரித வர்த்தகத் தளமான 'ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்' (Swiggy Instamart) தற்போது மளிகைப்பொருட்கள் அல்லாத பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்யும் விதமாக புதிய பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

'Instaprint' என பெயரிடப்பட்ட இந்த வசதி, தற்போது பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதை மற்ற நகரங்களிலும் விரிவுபடுத்த உள்ளதாக நிறுவனத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் எல்லோருக்குமே இத்தகைய தேவை திடீரென இரவு நேரங்களில் தேவைப்படலாம், அப்போதுதான் ஸ்கூல் புரோஜெக்ட் பற்றி நினவுக்கு வரலாம். திடீரென என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்காமல் இருக்க அதற்கான பிரிண்ட் அவுட்களை வீடு தேடி கொண்டு வரும் வசதி இப்போது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திடீரென விசா ஆவணங்கள் தேவையாகிற சூழ்நிலைகளை நாம் எல்லோரும் சந்தித்திருக்கிறோம். இப்போது இன்ஸ்டாமார்ட் மூலமாக, உங்கள் மளிகைச் சாமான்களுடன் சேர்த்து இந்தப் பிரிண்ட் அவுட் சேவையும் 10 நிமிடங்களில் உங்கள் வீட்டுக்கே வந்தடையும்," என Swiggy Instamart-ன் துணைத் தலைவர் அர்ஜுன் சௌத்ரி கூறினார்.
Instamart

இந்த சேவை இன்ஸ்டாமார்ட் முகப்புப் பக்கத்திலேயே காணக்கூடியதாக இருக்கும், மேலும் மளிகைச் சாமான்கள் மற்றும் பிற பொருட்களுடன் சேர்த்து ஒரே டெலிவரியாக ஆர்டர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இன்ஸ்டாமார்ட் தனது முக்கியமான இலக்கான பாதுகாப்பான லாபம் நோக்கி பயணிக்கின்றது. கடந்த ஜூன் காலாண்டில் சராசரி ஆர்டர் மதிப்பு (Average Order Value) ரூ.612 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது மளிகை அல்லாத பொருட்களின் விற்பனை உயர்வும், Maxxsaver எனப்படும் பெரிய ஆர்டர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் வெற்றியும் காரணமாக அமைந்துள்ளது.

இந்த புதிய சேவை, Zomato-வின் Blinkit ஏற்கனவே 2022-இல் அறிமுகப்படுத்திய ’பிரிண்ட்-ஆன்-டிமாண்ட்’ சேவைக்கு போட்டியாகும் வகையில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. Blinkit, ஆரம்பத்தில் டெல்லி NCR பகுதியில் சோதனை முறையில் சேவையை துவக்கியது, பின்னர் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஸ்விக்கியின் இத்தகு புதிய முயற்சி, துரித டெலிவரி வர்த்தகச் சந்தையில் போட்டிகளை சமாளிக்கவும், அதே நேரத்தில், பயனர்களுக்கான ஒற்றை சாளரத் தீர்வாகவும் (One-Stop Solution) முக்கியபங்கு வகிக்கிறது.

facebook twitter