
டெக்னோ எலெக்ட்ரிக் & எஞ்சினியரிங் கம்பனி லிமிட்டெட்டின் டிஜிட்டல் துறை ’டெக்னோ டிஜிட்டல்’ (Techno Digital), தமிழ்நாட்டின் சிறுசேரி SIPCOT ஐடி பூங்காவில் 36 மெகாவாட் திறனுடைய ஹைபர்ஸ்கேல் டேட்டா சென்டரை திறந்துள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் உள்-கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் $1 பில்லியன் முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2,00,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த தற்காலிக டேட்டா சென்டர், 2,400 உயர் அடர்த்தி அடுக்கு அமைப்புகளுக்கு இடமளிக்கக்கூடியதுடன், ஒவ்வொரு ரேக்கும் 10kW முதல் 50kW வரை திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் AI-க்கு உகந்த மிக மேம்பட்ட டேட்டா சென்டர்களில் ஒன்றாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வடிவமைப்பு ஒருங்கிணைக்கும் விஷயங்களாவன:
- 110 kV GIS சப்ஸ்டேஷன் – இரட்டை பவர் ஃபீட்கள், சூழலியல் தாக்கங்களுக்கு எதிரான நிலைத்தன்மை.
- NVIDIA GB200 சீரிஸுடன் சோதனை செய்யப்பட்ட உயர் தர UPS முறைமை.
- 75% தண்ணீர் சேமிப்பை சாதிக்கக் கூடிய கூலிங் முறை; நீர் மைய விலக்கு முறை (centrifugal) குளிரூட்டிகள், கூலிங் டவர்கள்.
டெக்னோ டிஜிட்டல் நிறுவன இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான அங்கித் சரையா கூறும்போது,
“இந்த AI ரெடி டேட்டா சென்டர் இந்தியாவின் டிஜிட்டல் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய கட்டமாகும். வலுவான உள்கட்டமைப்பு, முற்போக்கான வணிகக் கொள்கைகள் மற்றும் துடிப்பான திறமையாளர்கள் காரணமாக, சென்னை ஹைப்பர்ஸ்கேல் தரவு மையங்களுக்கு ஒரு சிறந்த இடமாகத் தனித்து நிற்கிறது. தொழில்நுட்பம் மற்றும் திறமையான மனித வளம் ஆகியவை இதற்குப் பொருத்தமான பின்புலமாக அமைந்துள்ளன,” என்றார்.

TEECL நிர்வாக இயக்குநர் பதம் பிரகாஷ் குப்தா கூறும்போது,
“இந்த உத்தி ரீதியான விரிவாக்கத்தின் மூலம் டெக்னோ எலக்ட்ரிக் நிறுவனம் உயர்தர, பெஞ்ச்மார்க் டிஜிட்டல் உள்கட்டமைப்பு தளத்தை உருவாக்குவதற்கான உறுதியைப் பூண்டுள்ளது. சென்னை தரவு மைய வசதி, குழுவின் EPC தலைமைத்துவம் மற்றும் நிதி ஒழுக்கத்திற்கு ஒரு சான்றாகும், இது அனைத்து பங்குதாரர்களுக்கும் சிறந்த வருமானத்தையும் நீண்டகால மதிப்பு உருவாக்கத்தையும் உறுதி செய்கிறது," என்றார்
இந்த சென்னை டேட்டா சென்டர், USGBC Gold சான்றிதழுக்கான தகுதியும், Rated 3+ நம்பகத்தன்மை தரநிலைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் முக்கிய உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.