2025ம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியல் - முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்!

01:35 PM Oct 07, 2025 | muthu kumar

2025-ம் ஆண்டிற்கான M3M ஹூரூன் 'இந்தியா பணக்காரர் பட்டியல்' வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.9.55 லட்சம் கோடி சொத்துகளுடன் மீண்டும் இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம், இந்த ஆண்டு ரூ.8.14 லட்சம் கோடி சொத்துகளுடன் இரண்டாம் இடத்துக்கு சரிந்துள்ளனர். கடந்த வருடத்தில் அதானியின் சொத்து மதிப்பு ரூ.11 லட்சம் கோடி ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் இடத்திற்கு, HCL தலைவர் ரோஷ்னி நாடார் மாலோத்ரா ரூ.2.84 லட்சம் கோடி சொத்துகளுடன் நுழைந்துள்ளார். இது அவரை இந்தியாவின் பணக்காரப் பெண் எனும் பெருமைக்கு உரித்தாக்குகிறது.

தற்போது, இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் உள்ளனர் – இது 13 வருடங்களுக்கு முன் இருந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது 6 மடங்கு அதிகம்.

இவர்களது மொத்த சொத்துகள்: ரூ.167 லட்சம் கோடி – இது இந்தியாவின் மொத்த ஜிடிபியில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது.

India cities richest man

இளம் பில்லியனர்கள்:

அரவிந்த் ஸ்ரீநிவாஸ் (31) – Perplexity நிறுவனத்தின் நிறுவனர், ரூ.21,190 கோடி சொத்துகளுடன் இளைய பில்லியனேராக பதிவாகியுள்ளார்.

கைவல்ய வோஹ்ரா (22) – Zepto நிறுவன இணை நிறுவனர்.

ஆதித் பழிச்சா (23) – Zepto உடன் இணைந்து இளம் பில்லியனேராக இருப்பவர்.

அதிக சொத்து வளர்ச்சியடைந்தவர்கள்:

நீரஜ் பஜாஜ் மற்றும் குடும்பம் – ரூ.69,875 கோடி அதிகரித்து மொத்தம் ரூ.2.33 லட்சம் கோடி சொத்துகளுடன் உள்ளார்.

விஜய் ஷேகர் ஷர்மா (Paytm நிறுவனர்) – 124% பங்குச் சந்தை உயர்வுடன் ரூ.15,930 கோடி சொத்துகளுடன் மீண்டும் பில்லியனராக மாறியுள்ளார்.

இந்தியாவின் பணக்கார நகரங்கள்:

மும்பை – 451 பில்லியனேர்கள்

நியூ டெல்லி – 223

பெங்களூரு – 116

முக்கிய தொழில்துறைகள்:

மருந்துகள் – 137 பில்லியனேர்கள்

தொழில்துறை தயாரிப்புகள் – 132

ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் – 125

ஷாருக் கான் பில்லியனர் பட்டியலில் இணைந்தார்!

இந்த வருடம், நடிகர் ஷாருக் கான் மிகப் பெரிய சாதனையை புரிந்துள்ளார். தேசிய விருதுகள் வென்றதுடன், தற்போது ரூ.12,490 கோடி (சுமார் $1.4 பில்லியன்) சொத்துகளுடன் பில்லியனர் பட்டியலில் முதன்முறையாக இணைந்துள்ளார்.

இவர், இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தத் திரை நட்சத்திரமாகவும், உலகப்புகழ்பெற்ற பலரும் இவரைவிட குறைவான சொத்துகளுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது:

டெய்லர் சுவிஃப்ட் (Taylor Swift) – $1.3 பில்லியன்

அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் (Arnold Schwarzenegger) – $1.2 பில்லியன்

ஜெர்ரி செய்ன்ஃபீல்ட் (Jerry Seinfeld) – $1.2 பில்லியன்

செலனா கோம்ச் (Selena Gomez) – $720 மில்லியன்