+

டிரம்ப் விதிக்கும் புதிய வரிகளால் இந்திய ஐடி துறைக்கு மறைமுக பாதிப்பு: EY India கருத்து!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதிக்கும் புதிய வரிகளினால் இந்திய தகவல்தொழில்நுப்டச் சேவைகள் துறை நேரடியாகப் பாதிப்படையாது, ஆனால் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் அமெரிக்க நிறுவனங்களை விருப்பப்படி தொழில்நுட்பச் செலவுகளைக் குறைக்கத் தூண்டக்கூடும் என்பதால் புதிய வரி விதிப்பின் தாக

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதிக்கும் புதிய வரிகளினால் இந்திய தகவல்தொழில்நுட்பச் சேவைகள் துறை நேரடியாகப் பாதிப்படையாது, ஆனால் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் அமெரிக்க நிறுவனங்களை விருப்பப்படி தொழில்நுட்பச் செலவுகளைக் குறைக்கத் தூண்டக்கூடும் என்பதால் புதிய வரி விதிப்பின் தாக்கங்கள் பெரிய அளவில் இருக்கும் என்று EY இந்தியாவின் தொழில்நுட்பத் துறைத் தலைவர் நிதின் பட் தெரிவித்தார்.

ஒரு புறம் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல்களினால் ஏற்றுமதியைப் பெரும்பாலும் நம்பியிருக்கும் இந்திய ஐடி துறை பொருளாதார நிச்சயமற்றச் சூழலில் இருந்து கொண்டிருக்கும் போது ட்ரம்ப்பின் இந்த புதிய வரிவிதிப்புகள் வந்துள்ளன.

இது தொடர்பாக நிதின் பட் மேலும் கூறும்போது,

“புதிதாக அறிவிக்கப்பட்ட 25% அமெரிக்க வரிகளால் இந்திய ஐடி சேவைத் துறை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், அதன் விளைவுகள் கணிசமாக இருக்கலாம். அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் அமெரிக்க நிறுவனங்களை தொழில்நுட்பச் செலவினங்களைக் குறைக்கத் தூண்டக்கூடும். அதே நேரத்தில், பணியாளர்கள் வரத்தும் போக்கும் வளர்ந்து வரும் டிஜிட்டல் வரிவிதிப்பு கட்டமைப்புகள் குறித்த ஒரு சங்கடமான நிலை போன்றவை எல்லை தாண்டிய சேவைகள் எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன என்பதை மறுவரையறை செய்யக்கூடும்," என்றார்.
Managed IT Services

Managed Services Provider

கலப்பு விநியோக மாடல்களை நோக்கிச் செல்லும் நிறுவனங்கள், புவியியல் ரீதியாக பரவலாக்கம் செய்யப்பெற்று செயற்கை நுண்ணறிவையும் உட்புகுத்தினால் அந்த நிறுவனங்கள் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும், என்றார் பட்.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், இந்த ஆண்டு 12,000க்கும் மேற்பட்ட, அதாவது, அதன் உலகளாவிய பணியாளர்களில் 2% பேரை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. டி.சி.எஸ் நிறுவனத்தில் நடந்த பணிநீக்கங்கள் தொழில்நுட்பத் துறையில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சந்தை அவதானிப்பாளர்கள் நம்புகின்றனர்.

டிசிஎஸ் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே. கீர்த்திவாசன் சமீபத்தில், மேக்ரோ பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முனைகளில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மைகள் நிலவுவதால் நிறுவனம் "தேவைக் குறைபாட்டை" சந்தித்து வருவதாகக் கூறினார், மேலும், நிதியாண்டு 2026 இல் இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியைக் காணப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

facebook twitter