
இந்தியாவின் நேரடி பணப்புழக்கப் பொருளாதாரத்தை முடக்கும் Unified Payments Interface (UPI) மூலம் நடக்கும் பணப்பரிமாற்றங்களின் எண்ணிக்கை ஜூலை மாதம் உச்சபட்சமாக 19.47 பில்லியன்களை எட்டியுள்ளது. இந்தத் தகவலை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
பணமதிப்பின் படி, ரூ.25.08 லட்சம் கோடி ஜூலையில் யுபிஐ பரிமாற்றங்கள் மூலம் நடைபெற்றுள்ளது. இது மே மாதத்தில் ரூ.25.14 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அளவைப் பொறுத்தவரை, கடைசியாக அதிகபட்ச எண்ணிக்கை மே மாதத்தில் 18.67 பில்லியன் பதிவாகியுள்ளது, இது ஜூன் மாதத்தில் 18.39 பில்லியனாகக் குறைந்து பரிவர்த்தனை தொகை ரூ. 24.03 லட்சம் கோடியாக இருந்தது.
ஜூன் மாதத்தில் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.25.08 லட்சம் கோடியாக இருந்ததாக NPCI தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது ரூ.20.64 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டு அடிப்படையில் 21% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாதத்திற்கு மாதம் அடிப்படையில், மதிப்பின் அடிப்படையில் வளர்ச்சி 4.3% என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைஸ்மணி சி.இ.ஓ. திலிப் மோடி இது தொடர்பாகக் கூறும்போது,
“இந்த எழுச்சி, சின்னஞ்சிறு தொழில்முனைவோர், உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைசி மைல் பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட்ஸ்களை அதிகளவில் ஏற்றுக்கொள்வதில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது, பணத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, முறையான நிதிச் சூழலை அணுகுவதைப் பெறுகிறது. UPI போன்ற தளங்கள் உருவாகும்போது, அவை உள்ளடக்கிய பொருளாதாரத்தின் டிஜிட்டல் முதுகெலும்பாக மாறி வருகின்றன,” என்றார்.
இன்று, இந்தியாவில் உள்ள அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் UPI 85% பங்களிக்கிறது. இதன் தாக்கம் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, உலகளாவிய நிகழ்நேர டிஜிட்டல் பேமெண்ட்களில் கிட்டத்தட்ட 50% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் முன்முயற்சியான NPCI, இந்தியாவில் சில்லறை பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகளை இயக்குவதற்கான ஒட்டுமொத்த அமைப்பாகும்.
அதிக பரிவர்த்தனைக்கான நேரங்களில் கணினி சுமையைக் குறைத்தல், தோல்வியுற்ற பரிவர்த்தனைகளைக் குறைத்தல் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துதல், ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு NPCI புதிய வரம்புகளைக் கொண்டு வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் பயனர்கள் தங்கள் கணக்கு இருப்பை ஒரு நாளைக்கு 50 முறை வரை UPI பயன்பாடுகள் மூலம் சரிபார்க்கலாம். முன்பு, எந்த வரம்பும் இல்லை. நிபுணர்களின் கூற்றுப்படி, நெட்வொர்க் சுமையைக் குறைப்பதற்கும், அமைப்புகள் சீராக இயங்குவதற்கும் இந்த வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'லிஸ்ட் அக்கவுண்ட்’ API வழியாக இணைக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளையும் காண்பிக்கும் அம்சம், ஒரு பயனருக்கு, ஒரு பயன்பாட்டிற்கு, ஒரு நாளைக்கு 25 கோரிக்கைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.
12 மாதங்களுக்கும் மேலாக செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட எந்தவொரு UPI ஐடியும், எண் மறு ஒதுக்கீட்டிற்குப் பிறகு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தானாகவே முடக்கப்படும், அதே நேரத்தில் UPI இல் சேர்க்கப்படும் புதிய வங்கிக் கணக்குகள் வலுவான பயனர் அங்கீகாரம் மற்றும் சரிபார்ப்பு சோதனைகள் உட்பட கறாரான சரிபார்ப்புக்கு உட்படும்.