
Puch என்ற AI ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் பாட்டியா, மாதத்திற்கு ரூ.2 லட்சம் லாபகரமான தொலைதூர internship வேலைவாய்ப்பைப் பற்றி X இல் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து வேலைதேடுவோர் ஆன்லைனில் வரிசைகட்டி நிற்கின்றனர்.
"Join @puch_ai to build AI for a Billion+ people," என்பதே சித்தார்த் பாட்டியாவின் பதிவாகும். இதோடு, தனது தேவைகளை தெளிவுபடுத்தும் அவர் இரண்டு பயிற்சியாளர்கள் - ஒருவர் AI பொறியாளராக பணிபுரியவும், மற்றவர் "வளர்ச்சி மந்திரவாதி"யாக வளர்ச்சியை நிர்வகிக்கவும் தேவை என்று பதிவிட்டுள்ளார்.
இதில் கவர்ச்சிகரமான அறிவிப்பு என்னவெனில், இந்த இண்டெர்ன்ஷிப்புக்கு கல்லூரி பட்டப்படிப்புத் தேவையில்லை என்று கூறியதுதான்.
“கடந்த மாதம் ஹைஸ்கூல் படித்தவர்களையே வேலைக்கு எடுத்தோம்” என்றும் பதிவிட்டதால் வேலைதேடுபவர்கள் இந்தப் பதிவின் கமெண்ட் பகுதியில் நெரிசலாக வரிசைக் கட்டி நிற்கின்றனர்.
பன்ச் AI என்பது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பட்டதாரி சித்தார்த் மற்றும் ஐஐடி பாம்பே முன்னாள் மாணவர் அர்ஜித் ஜெயின் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு AI ஸ்டார்ட் அப் நிறுவனமாகும்.
ஒவ்வொரு இந்தியரும் பேசும் மொழி அல்லது தொழில்நுட்பப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், செயற்கை நுண்ணறிவை அணுகக்கூடியதாக மாற்றுவதை, இந்த ஸ்டார்ட் அப் இலக்காகக் கொண்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கூட விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்பதால், சித்தார்த்தின் பதிவின் கமெண்ட் செக்ஷனில் இன்னும் பல கோரிக்கைகள் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.