+

Gold Rate Chennai: கொஞ்சம் மகிழ்ச்சி - தங்கம் விலை ரூ.560 குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.560 குறைந்துள்ளது. எனினும், சவரன் விலை ரூ.75,000 ஆக நீடிக்கிறது. எனவே, சுப காரியங்களுக்கு அவசியம் எனில் மட்டுமே நகை வாங்கலாம்.

வரலாறு காணாத உச்சம் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த இரு வர்த்தக தினங்களாக வெகுவாக குறைந்து வருவது நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 குறைந்து ரூ.9,445 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 குறைந்து ரூ.75,560 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 குறைந்து ரூ.10,304 ஆகவும், சவரன் விலை ரூ.216 குறைந்து ரூ.82,423 ஆகவும் இருந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.560 குறைந்துள்ளது. எனினும், சவரன் விலை ரூ.75,000 ஆக நீடிக்கிறது. எனவே, சுப காரியங்களுக்கு அவசியம் எனில் மட்டுமே நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலை இன்றும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (11.8.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 குறைந்து ரூ.9,375 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.75,000 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 குறைந்து ரூ.10,228 ஆகவும், சவரன் விலை ரூ.608 குறைந்து ரூ.81,824 ஆகவும் இருக்கிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (11.8.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.127 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,27,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.


தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஓரளவு மீளத் தொடங்கியிருக்கிறது. அதேபோல், கடந்த வாரம் முழுவதும் தடுமாறி வந்த பங்குச் சந்தையில் மீண்டெழத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவையும் சற்றே குறைந்துள்ளதால், தற்போது ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,375 (ரூ.70 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.75,000 (ரூ.560 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,228 (ரூ.608 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,824 (ரூ.608 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,375 (ரூ.70 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.75,000 (ரூ.560 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,228 (ரூ.608 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,824 (ரூ.608 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter