+

இந்திய ஏஐ மாதிரிகளை உருவாக்கும் முயற்சியின் ஊக்கம் அளிக்கும் பின்னணி!

டெக்ஸ்பார்க்ஸ் 2025 நெருங்கும் நிலையில், கோடிக்கணக்கான இந்திய பயனாளிகளுக்கு ஏற்ற உள்ளூர் நுணுக்கங்கள் கொண்ட ஏஐ நுட்பங்களை உருவாக்கும் அரசு ஆதரவு பெற்ற இந்திய ஸ்டார்ட் அப்கள் பற்றிய கண்ணோட்டத்தை அளிக்கிறோம்.

இந்தியாவில், அரசு ஆதரவு பெற்ற ஸ்டார்ட் அப்கள் இந்திய ஏஐ மாதிரிகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் சூழலில், நாட்டின் பாரம்பரிய அறிவும், நவீன தொழில்நுட்பமும் ஒன்றிணைவதை காண முடிகிறது.

சொந்த ஏஐ நுட்பத்தை உருவாக்குவதில் ஸ்டார்ட் அப்களில் அரசு ஆதரவு அளிப்பது, மேற்கத்திய ஏஐ மாதிரிகளை சார்ந்திருப்பதை குறைப்பதில் அரசுக்கு உள்ள உறுதியையும் உணர்த்துகிறது. இதற்கு மாறாக, இந்திய மொழிகள், கலாச்சார நுணுக்கங்களை புரிந்து கொள்ளக்கூடிய சொந்த ஏஐ மாதிரிகளை உருவாக்க விரும்புகிறது.

டிஜிட்டலை முதன்மையாகக் கொண்ட, புதுமையாக்கம் சார்ந்த எதிர்காலத்திற்கு ஏஐ முக்கிய சக்தியாக உள்ள நிலையில் இந்த போக்கை யுவர்ஸ்டோரி துவக்கம் முதல் அடையாளம் கண்டு வருகிறது.

Techsparks

’இந்தியா 2020: பவர்டு பை ஏஐ’ (India 2020: Powererd by AI) எனும் பெயரில், நவம்பர் 6 முதல் 8 வரை நடைபெற உள்ள 'டெக்ஸ்பார்க்ஸ் 2025' நிகழ்ச்சி ஏஐ சூழல் தலைவர்களை ஒன்றாக கொண்டு வந்து, இந்திய ஏஐ மாதிரிகள், இந்திய தொழில்நுட்ப பரப்பை மாற்றி அமைத்து வருவதோடு, கலாச்சார நோக்கில் திறன் மிக்க தொழில்நுட்பத்திற்கான சர்வதேச தரத்தை நிர்ணயிக்கின்றன என்றும் ஆய்வு செய்ய இருக்கிறது.

யுவர்ஸ்டோரியின் முன்னணி தொழில்நுட்ப மாநாட்டின் 16வது பதிப்பான இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, இந்திய மொழிகளை பேசி, அதன் இதயத்தை புரிந்து கொள்ளும் ஏஐ நுட்பத்தை உருவாக்கி வரும் முன்னோடி முயற்சிகளை முன்னிறுத்துகிறது.

இந்தியா பேசும் ஏஐ

121 மொழிகள் மற்றும் 19,500க்கும் மேலான பேச்சு வழக்குகளுடன் இந்தியா ஏஐ உருவாக்குனர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வொரு பிராந்தியமும், அதன் பேச்சு வழக்குகள், கலாச்சார அம்சங்கள் மற்றும் நூற்றாண்டுகளாக உருவான அறிவு அமைப்பை கொண்டுள்ளன. இருப்பினும், ஆங்கிலம் அல்லது இந்தி போன்ற பிரதான இந்திய மொழியில் முதன்மையாக பயிற்சி அளிக்கப்பட்ட பாரம்பரிய ஏஐ மாதிரிகள் பிராந்திய மொழிகளின் தன்மை மற்றும் உள்ளூர் கலாச்சார அம்சங்களை கவனத்தில் கொள்வதில்லை.

இந்தியாவின் பல்வேறு வகையான மக்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு சேவை அளிக்கும் வகையில் ஏஐ மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் அரசு ஆதரவு பெற்ற ஸ்டார்ட் அப்கள் ஈடுபட்டுள்ளன. இந்த உள்நாட்டு தீர்வுகள், அனைவரையும் உள்ளடக்கிய ஏஐ வளர்ச்சியில் இந்தியாவை முன்னிலைப்படுத்துகின்றன. இதே போன்ற வேறுபட்ட தன்மை கொண்ட நாடுகள், மேற்கத்திய மாதிரிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக தங்கள் தனித்தன்மையான மக்கள்தொகைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வரைவையும் இது அளிக்கிறது.

இந்த முயற்சியில் முன்னிலையில் இருப்பது, இந்திய தரவுகள் மற்றும் மொழிகள் சார்ந்த மொழி மாதிரிகளை(LLM)  உருவாக்கி வரும் பெங்களூருவைச் சேர்ந்த சர்வம் ஏஐ. இந்நிறுவனம், இந்திய அரசால் தனது இந்தியாஏஐ திட்டத்தின் அங்கமாக இறையாண்மை மிக்க பெரும் மொழி மாதிரியை உருவாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம், 24 பி காரணிகள் கொண்ட திறந்த எடை சர்வம்-எம் எனும் ஓபன் சோர்ஸ் மாதிரியை நிறுவனம் அறிமுகம் செய்தது. மிஸ்ட்ரல் ஸ்மால் மொழி மாதிரியை அடிப்படையாக கொண்ட இந்த சேவை, இந்திய மொழிகளுக்காக வடிவமைக்கப்பட்டது மற்றும் கணிதம், புரோகிராமிங் செயல்பாடுகளுக்கானது.

இதனிடையே, பெங்களூருவைச் சேர்ந்த இன்னொரு ஸ்டார்ட் அப்; Gnani.AI, இந்தியாஏஐ திட்டத்தின் கீழ், குரல் வழி பெரும் மொழி மாதிரியை உருவாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. குரல் வழி ஏஜெண்டிக் ஏஐ மேடையை நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த மேடை அதிக பேச்சுணர் திறன் கொண்டவை. என்.எல்.பி., எனும் இயற்கை மொழி செயல்லாக்கம் மற்றும் தானியங்கி ஏஐ ஏஜெண்ட்கள் திறன் கொண்டவை.

“மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றை உருவாக்குவதில் பெருமை கொள்கிறோம். 70 பில்லியன் காரணிகள் கொண்ட குரலுக்கு குரல் மூல மாதிரியை உருவாக்குகிறோம். மனித- இயந்திர தொடர்பிற்கான கனவு திட்டம் இது, என்கிறார் Gnani.ai இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.கணேஷ் கோபாலன்.

“பல்வேறு மொழிகள், கலாச்சார சூழல்களில் இயந்திரங்கள் மற்றும் மனிதர்கள் இடையே உணர்வு நோக்கில் திறன் கொண்ட இயல்பான உரையாடலை சாத்தியமாக்குவதை இந்த புதுமையாக்கம் கொண்டுள்ளது. இது உலக மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் கட்டமைப்பில் இல்லாதது,” என்கிறார்.

“புதுமையாக்கம் கொண்ட புதிய கட்டமைப்பின் மீது இது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, உரையாடல்கள் மனித தன்மையோடு, உள்ளடக்கிய தன்மையும் கொண்டுள்ளது. தொழில்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பயன்பாடுகள் கொண்டது,” என்றும் கூறுகிறார்.

இதன் ஏஐ தீர்வுகள் பிஎப்.எஸ்.ஐ., ரீடலை, ஆட்டோ, தொலைத்தொடர்பு துறைகளில் பயன்படுகிறது. டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ லாம்பார்டு, எஸ்பிஐ லைப், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இதே போல, கோரோவர்.ஏஐ (CoRover.ai) நிறுவனங்களுக்கான மனிதர்கள் சார்ந்த உரையாடல் மற்றும் ஆக்கத்திறன் ஏஐ மேடைகளை வழங்குகிறது. பெங்களுருவைச் சேர்ந்த நிறுவனம் அண்மையில் பாரத்ஜிபிடிமினி சேவையை அறிமுகம் செய்தது. 14 இந்திய மொழிகளில் சாதனங்கள், ஆப்லைனில் செயல்படக்கூடியது.   

“பாரத்ஜிபிடி மினி மூலம், உலக அரங்கில் ஏஐ பயனாளியில் இருந்து ஏஐ உருவாக்குனராக இந்தியா முக்கிய அடி எடுத்து வைத்துள்ளது. இறையாண்மை கொண்ட, பல மொழி, பல் நோக்கிலான சேவை உற்பத்தி பயன்பாட்டிற்கானது. தனியுரிமை, தாமதம் இன்மை மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை கொண்டது, என்கிறார் CoRover.ai சி.இ.ஓ.அன்குஷ் சபர்வால்.


இறையாண்மை, பொருத்தம்

ஏஐ யூனிகார்ன் நிறுவனம் பிராக்டல், நுகர்வோர் துறை, ரீடைல், நிதிச்சேவைகள், காப்பீடு உள்ளிட்ட துறைகளில் ஏஐ சார்ந்த தரவுகள் தீர்வை அளிக்கிறது. 150க்கும் மேலான ஃபார்டியூன் 500 நிறுவனங்களை வாடிக்கையாளராக கொண்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம் 14 பில்லியன் காரணிகள் கொண்ட ஓபன் சோர்ஸ் ரீசனிங் மாதிரி Fathom-R1-14B அறிமுகம் செய்துள்ளது. கணிதம் மற்றும் பொதுவான காரணங்கள் சார்ந்த செயல்களை நிறைவேற்றக்கூடியது.

“உருவங்களை உருவாக்கும் மாதிரி (Kalaido.ai நிறுவனத்திற்கான டிப்யூஷன் மாதிரி), சுகாதார துறைக்கான பல் நோக்கி மாதிரி (Vaidya.ai பின் உள்ள மொழி மாதிகள் மற்றும் வி.எல்.எம்கள்) உள்ளிட்ட பல உற்சாகம் அளிக்கும் மாதிகளை உருவாக்கி உள்ளோம். அண்மையில் அறிமுகம் செய்த Fathom மாதிரி, ரீசனிங் மாதிரிகளில் சிறந்த செயல்பாடுகளை கொண்ட ஒன்று. இந்தியாவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் மாதிரியாக இருப்பதை காண்கிறோம்,” என்கிறார். பிராக்டல் முதன்மை ஏஐ அதிகாரி சூரஜ் அமோன்கர்.   

இந்த மாதிரி, அமெரிக்க அழைப்பு கணித சோதனை மற்றும் ஹார்வர்டு-எம்.ஐடி. கணித போட்டிகளில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

“இந்திய மாதிரிகள் அறிமுகம் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது. உலகின் சிறந்த மாதிரிகளுடன் போட்டியிடக்கூடிய மேம்பட்ட மாதிரிகளை உருவக்கும் வகையில் சூழல் முன்னேறும் என நம்புகிறோம், என்கிறார்.

ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் நிறுவியுள்ள ஓலா க்ருத்ரிம் இந்திய சந்தையில் செயல்படும் இன்னொரு ஏஐ நிறுவனமாகும். இரண்டு மூல மாதிரிகள் (Krutrim V2 and Krutrim Pro ), கிளவுட் மேடை, ஏஐ ஸ்டூடியோ, ஏஐக்கு ஏற்ற சொந்த சிப்கள் ஆகியவற்றை நிறுவனம் கொண்டுள்ளது.

இந்திய மாதிரிகளின் முக்கியத்துவம் இறையாண்மை மட்டும் அல்ல அவற்றின் பொருத்தம், என்கிறார் ஏஐ அண்டு பியாண்ட் அமைப்பின் சி.இ.ஓ.ஜஸ்ப்ரீத் பிந்த்ரா.

“இந்திய ஏஐ நுட்பத்தை பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் அதை உருவாக்கவும் துவங்கியிருக்கும் அருமையான புள்ளியில் இருக்கிறோம். சர்வம் ஏஐ போன்ற மாதிரிகள், சர்வதேச நுட்பத்தை சார்ந்திருப்பதில் இருந்து, நம்முடைய மொழிகள், தரவுகள், சூழல் சார்ந்த மாதிரிகள் நோக்கிய சக்தி வாய்ந்த மாற்றத்திற்கு வித்துட்டுள்ளன,” என்கிறார்.
Agentic AI

இந்திய மொழிகள், சொல்வழக்குகள், சமூக நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட மாதிரிகள் மேற்கத்திய மாதிரிகளை விட இந்தியர்களுக்கு மிகவும் ஏற்றவை என்கிறார்.

இந்திய ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை புரிந்து கொள்ளக்கூடிய குரல் உதவியாளர்கள், பிராந்திய மண் தரவுகள் சார்ந்த வேளாண் மாதிரிகள், உள்ளூர் பாடத்திட்டங்களுக்கு ஏற்ற கல்விநுட்பம் ஆகியவற்றை உருவாக்க ஸ்டார்ட் அப்களுக்கு பெரும் வாய்ப்பு உள்ளது.

“இதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உருவாக்க வேண்டும், என்கிறார் பிந்த்ரா.

ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மனt


Edited by Induja Raghunathan

facebook twitter