
ஐஐடி மெட்ராஸ் ஆய்வு பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஆழு நுட்ப ஸ்டார்ட் அப் 'கோச்சடை டெக்னாலஜிஸ்' (Kochadai Technologies) தொழில்நுட்ப பின்புலம் இல்லாதவர்களும் இயற்கை மொழி பிராம்ட்கள் மூலம் நுணுக்கமான இண்டெர்நெட் ஆப் திங்ஸ் அமைப்புகளை உருவாக்கி கொள்ள வழி செய்யும் 'மேக்ஜிபிடி'யை (MakeGPT) அறிமுகம் செய்துள்ளது.
ஜீரோ டு ஒன்: ஜென் ஏஐ பிராடக்ட் டே மாநாட்டில் இந்த சேவையை தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார். ஜென் ஏஐ எப்படி சேவைகள், பொருட்கள் உள்ளிட்ட உருவாக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை காட்சிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடம் பெற்றனர்.
பல ஆண்டு பொறியியல் பயிற்சி தேவைப்படும் பாரம்பரிய ஐஓடி அமைப்புகள் போல இல்லாமல், மேக்ஜிபிடி பயனாளிகள் இயல்பான மொழியில் தேவைகளை விவரிக்க வழி செய்து அதற்கேற்ற முழுமையான ஐஓடி தீர்வுகளை உருவாக்கித்தருகிறது.
இந்த மேடையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- இயற்கை மொழி மூலம் வென்பொருள் இடைமுகம்
- தானியங்கி அமைப்பு உருவாக்கம்
- நிகழ்நேர வடிவமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு
- கல்வி சார்ந்த விளக்க வசதி
"தண்ணீர் தேவைப்படும் போது போனில் தகவல் அளிக்கும் வகையில்; 'மண் வளம் மற்றும் செடிகளை கண்காணிக்க உதவும் அமைப்பை உருவாக்கவும்' என கட்டளையிட்டால் அதற்கேற்ப முழுமையான முன்னோட்ட வடிவை அளிக்க முடிந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். இதை தான் மேக்ஜிபிடி செய்கிறது,” என்று கோச்சடை டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனர் நவீனா சாமி கூறினார்.
IITMRP சூழலின் அங்கமான மேக்ஜிபிடி, இந்த அமைப்பு முன்னிறுத்த விரும்பும் தொழில்நுட்ப சேவைகளை முன்னெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வல்லுனர்கள் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. மேக்ஜிபிடி ஏஐ இடைமுகம் காட்சி விளக்கமும் இடம்பெற்றது.
Edited by Induja Raghunathan