+

2030-ம் ஆண்டுக்குள் Ai-யால் 1.8 கோடி பேருக்கு வேலை பறிபோகும் வாய்ப்பு - அறிக்கையில் பகீர் தகவல்!

உற்பத்தி, சில்லரை விற்பனை மற்றும் கல்வித்துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தாக்கத்தினால் 2030-ம் ஆண்டு வாக்கில் சுமார் 1.8 கோடி பேருக்கு வேலை பறிபோகும் ஆபத்து இருப்பதாக சர்வீஸ் நவ் அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. இதில் உற்பத்தித் துறையில் மட்டுமே 80 லட்சம் பேருக்கு வேலை போகும் வாய்ப்புள்ளதாக அந்த அறிக்

உற்பத்தி, சில்லரை விற்பனை மற்றும் கல்வித்துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தாக்கத்தினால் 2030-ம் ஆண்டு வாக்கில் சுமார் 1.8 கோடி பேருக்கு வேலை பறிபோகும் ஆபத்து இருப்பதாக சர்வீஸ் நவ் அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

இதில் உற்பத்தித் துறையில் மட்டுமே 80 லட்சம் பேருக்கு வேலை போகும் வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. சில்லரை விற்பனைத் துறையில் 76 லட்சம் வேலைகளும் கல்வித்துறையில் 25% வேலைகளும் போயே போய்விடும், என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு ஏஜெண்ட்கள் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சாஃப்ட்வேர் சிஸ்டம்கள் சேஞ்ச் மேனேஜர்கள் மற்றும் சம்பளப் பதிவேட்டில் உள்ள கிளார்க்குகள் போன்ற உயர் தானியங்கிப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி விடும் என்கிறது இந்த அறிக்கை. மாறாக உயர் வளர்ச்சிப் பணிகளான நடைமுறைப்படுத்தும் ஆலோசகர்கள் பணி மற்றும் சிஸ்டம் அட்மின் பணிகள் செயற்கை நுண்ணறிவுடன் போட்டியிடாமல் கூட்டணி அமைத்துக் கொள்வதையே நாம் பார்க்கலாம் என்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்களால் 12,000 வேலைகளை - அதன் ஒட்டுமொத்த பணியாளர்களில் சுமார் 2% - குறைக்கப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வேலைகளில் AI இன் தாக்கம் குறித்து பரவலான கவலை ஏற்பட்டுள்ளது.

Agentic AI: How Robots Will Be Transforming Your Life by 2025

சர்வீஸ்நவ் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் வணிக மையத்தின் நிர்வாக இயக்குநர் சுமீத் மாத்தூர் கூறுகையில்,

"AI - 2030 ஆம் ஆண்டுக்குள் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கும். இது பணியாளர்களையும் மறுவடிவமைத்து வருகிறது, மேலும் 1.35 கோடிக்கும் மேற்பட்ட பணிகளை 'மறுவரையறை' செய்யும்," என்றார்.

ஆனால், இந்தியா செயற்கை நுண்ணறிவுத் திறமைகளை தயார் செய்து வணிக வடிவங்களை மாற்றுத் திசைவழிப்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு தலைமுறை சார்ந்த வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

இந்த நிறுவனம் 500க்கும் மேற்பட்ட தொழில்துறைத் தலைவர்களிடம் AI-க்கு மாறுவது குறித்து ஆய்வு நடத்தியது. அவர்கள், தொழில்நுட்ப பட்ஜெட்டுகளில் 13.5% ஏற்கனவே AI-க்கு மாறுவதை உறுதியளித்துள்ளதாகவும், இந்திய நிறுவனங்களில் நான்கில் ஒரு பங்கு மாற்றுக் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்திய நிறுவனங்களில் 30% பேருக்கு தரவு பாதுகாப்புதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது, அதே நேரத்தில் 26% நிறுவனங்கள் எதிர்காலத் திறன் தொகுப்புகள் குறித்து "தெளிவில்லாமல்" உள்ளன என்று கூறும் இந்த சர்வீஸ் நவ் ஆய்வு, தந்திரோபாய தொலைநோக்குப் பார்வை அமைப்பாக்கம் பெற்ற பல்துறை திறன் வளர்ப்பு ஆகியவற்றின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது

facebook twitter