Cupertino-இல் நடந்த “Awe Dropping” நிகழ்வில் உலகின் மிக மெலிந்த ஐபோன் “iPhone Air” ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் பெரும் எதிர்பார்ப்புடன் கூடிய ஆண்டு விழா நிகழ்ச்சி, “Awe Dropping”, இன்று கலிபோர்னியாவின் ஆப்பிள் பார்க் மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கம் ஸ்டீவ் ஜாப்ஸின் பிரசித்தி பெற்ற வாக்குடன் ஆரம்பமானது: “Design is not just what it looks like and feels like. Design is how it works.”
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iPhone Air-ஐ உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இது, ஆப்பிளின் இதுவரை வெளியான மிகச் சிறிய-மெலிந்த (5.6mm) ஐபோன் எனும் பெருமையை பெற்றுள்ளது.

வடிவம்தான் மெலிந்தது! செயல்திறன் அபாரம்! ஐபோன் ஏர்-இன் முக்கிய அம்சங்கள்:
- 6.5 இன்ச் Super Retina XDR திரை, 120Hz வரை ரிப்ரெஷ் ரேட் கொண்டது; செயலில் இல்லாத பொழுது 1Hz-க்கு குறைந்து மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது.
- 3000 நிட்ஸ் பிரகாசம் கொண்ட திரை, வெளியிலும் வெயிலிலும் கூட தெளிவாக காணும் வசதி.
- பளிச்சென்ற டைட்டானியம் ஃப்ரேம், உயர்த்திய பின்புற அமைப்பு – பேட்டரி மற்றும் பிற கூறுகளுக்கு கூடுதல் இடம்.
- ஆக்ஷன் பட்டன் மற்றும் கேமரா கண்ட்ரோல் போன்றவை முக்கிய அம்சங்களை விரைவில் அணுக உதவுகின்றன.
- வலிமை வாய்ந்த கண்ணாடி – கீறல்கள் விழாமல் தடுக்கிறது. அதே போல், கூசுதலையும் குறைக்கிறது. மேலும் ஒட்டுமொத்த நீடித்தத் தன்மையை வழங்குகிறது.
இந்த போன், ஆப்பிளின் சமீபத்திய சிப்களான A19 Pro, N1 நெட்வொர்க்கிங் சிப் மற்றும் C1X மோடம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. A19 Pro வேகமான அன்றாட செயல்திறன் மற்றும் கிராபிக்ஸ்-தீவிர பணிகளுக்காக 6-கோர் CPU மற்றும் 5-கோர் GPU ஆகியவற்றைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் நியூரல் ஆக்சிலரேட்டர்கள் சாதனத்தில் AI ஐ ஆதரிக்கின்றன.
N1 சிப் Wi-Fi 7, புளூடூத் 6 மற்றும் த்ரெட் ஆகியவற்றை செயல்படுத்துகிறது, இது வயர்லெஸ் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது, மேலும், C1X மோடம் வேகத்தை ஆற்றல் திறனுடன் இணைத்து, சாதனத்தை அதிக மின் தாங்குத் திறன் கொண்டதாக மாற்றுகிறது.
AI சிறப்பம்சங்களும், கேமராவின் புதிய மேம்பாடுகளும்:
- முன்புற கேமரா – 18MP, காட்சியின் சிக்கல்களைத் தானாக சரிசெய்யும் AI.
- பின்புறம் – 48MP Fusion கேமரா அமைப்பு, 4 வகையான ஃபோக்கல் லென்ஸ் (28mm, 35mm, உள்ளிட்டவை)
- 2x டெலிபோட்டோ, 4K HDR வீடியோ, முன் மற்றும் பின் கேமராக்கள் ஒரே நேரத்தில் பதிவு செய்யும் வசதி
மேம்பட்ட உருவப்பட எஃபெக்ட், மற்றும் புதிய புகைப்பட பாணிகள் சரும நிறத்தையும் ஒட்டுமொத்த துடிப்பையும் மேம்படுத்துகின்றன, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் மீது அதிக ஆக்கப்பூர்வமான கட்டுப்பாட்டை வழங்குகின்றன.
சிறப்பான கூடுதல் சாதனம் இதன் MagSafe Battery ஆகும். ஐபோன் ஏர் மேக்சேஃப் பேட்டரி போனின் பின்புறத்தில் காந்தமாக இணைக்கப்பட்டு, தேவைப்படும்போது சாதனத்தை சார்ஜ் செய்து, பேட்டரி ஆயுளை நீட்டிக்க உதவுகிறது, ஒன்றாகப் பயன்படுத்தும்போது 40 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.
ஐபோன் ஏர் ஸ்பேஸ் பிளாக், கிளவுட் ஒயிட், லைட் கோல்ட் மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கும், 256 ஜிபி சேமிப்பகத்துடன் தொடங்குகிறது, 512 ஜிபி மற்றும் 1 டிபி விருப்பங்களும் கிடைக்கின்றன. விலைகள் ரூ.119,900 இல் தொடங்குகின்றன. முன்கூட்டிய ஆர்டர்கள் செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி, மாலை 5:30 மணிக்குத் தொடங்கும், செப்டம்பர் 19 வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கும். ஐபோன் ஏர் மேக்சேஃப் பேட்டரி தனித்தனியாக ரூ.11,900 விலையாகும்.
மற்ற அம்சங்கள்:
- eSIM மட்டும் – ரியல் சிம் இல்லை
- முதல் சேமிப்பு மாடல்: 256GB
- மற்ற மாடல்கள்: 512GB மற்றும் 1TB
- வண்ணங்கள்: Space Black, Cloud White, Light Gold, Sky Blue
விலை விவரங்கள் மற்றும் வெளியீட்டு தேதி:
- ஆரம்ப விலை: ₹1,19,900
- முன்பதிவு துவக்கம்: செப்டம்பர் 12, மாலை 5:30 மணி (IST)
- விற்பனை துவக்கம்: செப்டம்பர் 19
பிரபலங்கள் வரவேற்பு:
OpenAI நிறுவன தலைவர் சாம் ஆல்ட்மன், X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவு செய்ததாவது:
"நான் ரொம்ப நாளாக ஆசைப்பட்ட முதல் புதிய ஐபோன் அப்கிரேட்! ரொம்ப நல்லா இருக்கு." (“First new iPhone upgrade I have really wanted in awhile! Looks very cool.”) என்று பதிவிட்டுள்ளார்.
அறிமுகமான iPhone Air, டிசைன், செயல்திறன் மற்றும் புதுமைகளால் கவனத்தை கவர்ந்துள்ளது. இவ்வாண்டின் மாபெரும் டெக் அறிவிப்புகளில் ஒன்றாக இது ஏற்கெனவே கருதப்படுகிறது.
ஐபோன் 17 மற்றும் புரோ மேக்ஸ்:
iPhone 17 Pro மற்றும் Pro Max மாடல்கள் brushed aerospace-grade அலுமினியம் unibody) உடன் உருவாக்கப்பட்டிருக்கும். பின் பகுதி சிறிது உயர்த்தப்பட்டிருக்கும். அதனால் பெரிய பேட்டரிக்கு இடமிருக்கும். இதிலுள்ள A19 Pro சிப் அதிகவேகத்தில் வேலை செய்யும்போது வரும் வெப்பத்தை கட்டுப்படுத்த vapor chamber உள்ளடக்கப்பட்டிருக்கும். அது அந்த வெப்பத்தை ஃபோனின் frame-க்கு அனுப்பி வெளியேற்றும். இதனால் நீண்ட நேரம் gaming, video editing மற்றும் AI (artificial intelligence) வேலைகளில் சாதனம் நீடித்து வேலை செய்யும்.
இது Apple-ன் high-wattage USB-C adapter பயன்படுத்தினால் 20 நிமிடத்தில் 50% வரை சார்ஜ் ஆகும்.
iPhone 17 Pro மாடலில் 6.3 அங்குலம், Pro Max-ல் 6.9 அங்குலம் அளவுள்ள Super Retina XDR display இருக்கும். இதில் ProMotion upto 120Hz மற்றும் Always-On Display வசதிகள் உள்ளன. வெளிப்புற ஒளியில் அதிக பிரகாசத்துடன், iPhone Air போல் கீறல் தடுப்பு மற்றும் நீண்ட நாள் வரும் கண்ணாடிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
A19 Pro சிப்:
6-core CPU
6-core GPU
ஒருங்கிணைக்கப்பட்ட நியூரல் ஆக்சிலரேட்டர்கள்
16-core நியூரல் எஞ்ஜின் – இது கிராபிக்ஸ், AI மற்றும் gaming-க்கு பயன்படுத்தப்படும்
மேலும் இதில் N1 chip மற்றும் C1X modem ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் iPhone 17 Pro மற்றும் Pro Max-ஐ வேகமான, சக்திவாய்ந்த மற்றும் சுருக்கமாகச் சொல்லும்போது “கேம், AI, மற்றும் வீடியோ எடிட் செய்ய ஏற்ற சாதனங்களாக மாற்றுகிறது.
ஐபோன் 17 ப்ரோ 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டெராபைட் வகைகளில் கிடைக்கும், அதே நேரத்தில் புரோ மேக்ஸ் முதல் முறையாக 2 டெராபைட் தெரிவையும் சேர்க்கிறது. இரண்டு மாடல்களும் காஸ்மிக் ஆரஞ்சு, டீப் ப்ளூ மற்றும் சில்வர் நிறங்களில் வருகின்றன, இதன் விலை ப்ரோ ரூ.134,900 மற்றும் ப்ரோ மேக்ஸ் ரூ.149,900 இல் தொடங்குகிறது.
ஐபோன் 17:
ஐபோன் 17 மெல்லிய பார்டர்கள் மற்றும் 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவுடன் கூடிய புற அமைப்பைக் கொண்டுள்ளது. 120Hz வரையிலான ப்ரோமோஷன், எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே, ஐபோன் ஏரைப் போலவே அதே உச்ச வெளிப்புற பிரகாசம், வலுவூட்டப்பட்ட கண்ணாடி, கீறல் எதிர்ப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை போன்றவை சிறப்பம்சங்களாகும்.
ஐபோன் ஏரின் A19 ப்ரோவுடன் ஒப்பிடும்போது A19 சிப் வேகமான செயல்திறன் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது, அதே நேரத்தில், 6-கோர் CPU மற்றும் 5-கோர் GPU அடுத்தக்கட்ட மொபைல் கேமிங்கை வழங்குகின்றன. சாதனத்தில் உள்ள நியூரல் ஆக்சிலரேட்டர்கள் செயற்கை நுண்ணறிவை ஆதரிக்கின்றன.
N1 நெட்வொர்க்கிங் சிப், ஐபோன் ஏர் போலவே, வயர்லெஸ் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது. அதிக வாட்ஸ் கொண்ட USB-C அடாப்டரைப் பயன்படுத்தி 20 நிமிடங்களில் 50% வரை வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் கொண்டது.
இந்த சாதனம் 18MP சதுர சென்சார் கொண்ட புதிய சென்டர் ஸ்டேஜ் முன் கேமராவைப் பெற்றுள்ளது, தானாகவே ஃப்ரேமிங்கை AI சரிசெய்யும் வசதி மற்றும் இரட்டை கேப்ச்சர் வசதியுடன். வீடியோ 4K HDR-ல் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகளும் ஐபோன் ஏர் போன்றதே.
iOS 26-ல் உள்ள பிரைட் ஸ்டைல் உட்பட அடுத்த தலைமுறை புகைப்பட பாணிகள், iPhone Air-ல் உள்ளதைப் போலவே நிகழ்நேர கலர் அட்ஜெஸ்ட்மெண்ட். ஹைலைட்ஸ் மற்றும் நிழல்களை அனுமதிக்கின்றன. சினிமாப் பாணி பயன்முறை, ஆக்ஷன் முறை, ஸ்பேஷியல் ஆடியோ, ஆடியோ மிக்ஸ் மற்றும் காற்றின் இரைச்சல் குறைப்பு போன்ற வீடியோ அம்சங்கள் உள்ளன.
தமிழில்: முத்துகுமார்