+

ஜிஎஸ்டி பதிவு, ரீபண்ட் மற்றும் தாக்கல் தொடர்பாக என்னென்ன சீர்திருத்தங்கள் வரப்போகிறது?

மாநில அமைச்சர்கள் குழுவுடன் பகிரப்பட்டுள்ள திட்டத்தின் படி, பெரும்பாலான ஜிஎஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு பதிவு வழங்குவதை 3 நாட்களாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி பதிவு செய்த வரி செலுத்துபவர்களின் விதிமுறைகள் நிறைவேற்றம் தொடர்பான சுமையை குறைக்கும் வகையில் மத்திய அரசு அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை, பதிவு, ரீபண்ட், மற்றும், வரித்தாக்கலில் உத்தேசித்துள்ளது.

மாநில அமைச்சர்கள் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த முன்வடிவின் படி, பெரும்பாலான ஜிஎஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு ஜிஎஸ்டி பதிவுக்கான காலத்தை மூன்று நாட்களாக கொண்டு வர உத்தேசித்துள்ளது. மேலும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தலைகீழ் வரி அமைப்பு கொண்டவர்களுக்கு ரீபண்ட் வழங்குதலை விரைவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் நடைபெற உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள இந்த திட்டம், பெரும்பாலான அல்லது 80 சதவீத ரீபண்ட்கள் விண்ணப்பம் செய்யப்பட்ட உடன் பரிசீலிக்கப்பட உள்ளது.
GST

கால தாமதம் இருக்கலாம் என்றாலும், ரீபண்ட்கள் வேகமாக பைசல் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கால அளவிலான பதிவு முறையை, குறிப்பாக சிறு வர்த்தகம் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு பின்பற்றவுன் கவுன்சிலுக்கு மத்திய அரசு பரிந்துரைக்க உள்ளது. 95 சதவீத விண்ணப்பதாரர்களுக்கு இடர் அளவீடுகள் அடிப்படையில் பதிவு வழங்கப்படும். க்ரீன் சேனல் போல இது செயல்படும்.

ரீடர்ன்களை பொருத்தவரை, முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் தலையீடு தவிர்க்கப்பட்டு, பொருந்தாத தகவல்களும் குறையும்.

பதிவு செயல்முறையை எளிமையாக்குவதை பொருத்தவரை, 2024 டிசம்பரில் ஜிஎஸ்டி கவுன்சில், வர்த்தகங்களை புதிய/ சிறு வர்த்தகம், நம்பகமான வர்த்தகமாக கருதப்படுபவை மற்றும் வளரும் வர்த்தகம் என வகைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

சிறிய அல்லது புதிய வர்த்தகங்களுக்கு, மூன்று நாட்களுக்குள் பதிவு வழங்கவும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. உள்ளீடு வரி கிரெடிட் தொடர்பான நிபந்தனைக்கு ஏற்ப இது அமையும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி, நம்பகமான வர்த்தகம் என கருதப்படுபவை, பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அதிக ஜிஎஸ்டி அல்லது அதிக வருமான வரி செலுத்தும் நிறுவனங்களாக அமையலாம். இவை குறைந்த இடர் கொண்டவையாக கருதப்பட்டு, ஆதார் சரிபார்ப்பு செயல்முறை இல்லாமல் பதிவு வழங்கப்படலாம். இவை வரம்பில்லா உள்ளீடு கிரெடிட் கொண்டிருக்கும்.

உள்ளீடு கிரெடிட் வரி குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள ஆனால் நம்பகமான நிறுவனங்களை விட குறைந்த அளவு கொண்ட வர்த்தகங்கள் வளரும் வர்த்தகங்களாக கருதப்படும். சட்டக்குழுவின் பரிந்துரையின் படி இத்தகைய வர்த்தகங்கள் தீவிரமான பதிவு செயல்முறைக்கு உள்ளாகலாம். விண்ணப்ப கட்டணம், டெபாசிட், நேரடி சரி பார்ப்பு உள்ளிட்டவை அடங்கும்.

உள்ளீடு கிரெடிட் வரி சலுகை விரும்பாத அல்லது குறைவாக கொண்ட சிறிய அல்லது புதிய வர்த்தகங்களுக்கு பதிவு செயல்முறை எளிமையாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகங்களுக்கு ஆதார் மற்றும் நேரடி சரி பார்ப்பு இல்லாமல் 3 வேலை நாட்களுக்குள் பதிவு வழங்கப்படும்.

தரவுகளின் படி, 95 சதவீத புதிய விண்ணப்பங்கள், புதிய அல்லது சிறிய வர்த்தகங்கள் கீழ் வருகின்றன. இவை உள்ளீடு வரி கிரெடிட் கோராதவை அல்லது 5 லட்சம் எனும் வரம்பு கொண்டவை.

இடர் அளவீடுகள் அடிப்படையில் ஜிஎஸ்டி பதிவை மேற்கொள்வதற்கான காரணமாக உண்மையான வரி செலுத்துபவர்களுக்கு நடைமுறையை எளிதாக்குவது அமைகிறது. அதே நேரத்தில் மோசடியாளர்கள் பதிவு செய்து போலி சலுகை பெறுவதை தடுக்கும் நோக்கம் கொண்டது.

போலியாக உள்ளீடு வரி கிரெடிட் கோருவதற்காக செய்யப்படும் போலி பதிவு வரி அதிகார்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. போலி பதிவுகளை தடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் குறிப்பிட்ட வர்த்தகங்களுக்கு பயோமெட்ரிக் சரி பார்த்தலை கொண்டு வந்துள்ளது. இதற்காக விண்ணபிப்பவர் ஆதார் மையம் சென்று சரி பார்க்க வேண்டும்.

2024 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஜிஎஸ்டி அதிகாரிகள், 17,818 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.35,132 கோடி வரி ஏய்ப்பை கண்டறிந்து, 69 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள், ரூ.7.08 லட்சம் கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பை கண்டறிந்துள்ளனர். உள்ளீடு வரி கிரெடிட் மோசடி இதில் ரூ.1.79 லட்சம் கோடியாகும்.

2024-25 ல் மட்டும் ஜிஎஸ்டி அதிகாரிகள் ரூ.2.23 லட்சம் கோடி அளவிலான வரி ஏய்ப்பை கண்டறிந்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காலத்தில் கண்டறியப்பட்ட 30.056 மோசடி வழக்குகளில் 15,283 உள்ளீடு வரி தொடர்பானவை. இதன் மூலமான வரி ஏய்ப்பு ரூ.58,772 கோடி ஆகும்.

செய்தி: பிடிஐ


Edited by Induja Raghunathan

facebook twitter