
குழந்தைகள் வாழ்வியல் பிராண்டான 'ஃபேம்யோ' (Famyo), விதை நிதியாக ரூ.4 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐஏஎன் ஏஞ்சல் ஃபண்ட் தலைமையிலான இந்த சுற்றில், ஷிவாலி விஜ், தீபன்க் குமார், பிரதிக் மதுர்கர், உதய் சோதி ஆகியோர் முன்னணி முதலீட்டாளராக பங்கேற்றனர். சென்னை ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்டோபர் நோர்டனும் இந்த ஸ்டார்ட்-அப்’இல் முதலீடு செய்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த ஃபேம்யோ, குழந்தைகளுக்கான ஆடைகளை, அவர்கள் விரும்பி சேகரிக்கக் கூடிய வகையில் அபிமான பாத்திரங்கள் சார்ந்த வடிவமைப்பாக மாற்றுகிறது. இதன் மூலம், சிறார்கள் விரும்பும் புதுமை மற்றும் பெற்றோர்கள் நாடும் பாதுகாப்பு இரண்டையும் அளிக்கிறது.
இவர்களின் இரவில் ஒளிரும் விரிப்புகள், சாகச பாத்திரங்கள் கொண்ட டவல்கள், பாத்திரங்கள் சார்ந்த துணைப்பொருட்கள் பிரிமியம் துணிகளுடன் விளையாட்டுத்தன்மை கொண்ட வடிவமைப்பை இணைக்கிறது. கேரக்டர் உருவாக்கம், பாத்திரங்கள் சார்ந்த கதை சொல்லல், என ஒவ்வொரு அம்சத்திலும் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

Famyo நிறுவனர்கள் கரிஷ்மா சீதாராமன் மற்றும் ரித்விக் ராஜ்
கரிஷ்மா சீதாராமன் மற்றும் ரித்விக் ராஜ் ஆகியோரால் துவங்கப்பட்ட ஃபேம்யோ; லெகோ மற்றும் ஸ்மிகில் ஆகிய சர்வதேச பிராண்ட்களுக்கான இந்திய பதிலாக அமைகிறது.
ஏற்கனவே ஆண்டு அடிப்படையில் ரூ.12 கோடி வருவாய் கடந்துள்ள நிறுவனம், காலாண்டு அடிப்படையில் 40 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது.
”ஐஏஎன் முதலீடு, இந்தியாவின் முதல் சர்வதேச சிறார் பிராண்டை உருவாக்கும் எங்கள் பார்வைக்கு வலு சேர்க்கிறது. புதிய பிரிவுகளில் விரிவாக்கம் செய்து வருகிறோம். எங்கள் வடிவமைப்பு அறிவுசார் சொத்துரிமையை வலுவாக்கி வருகிறோம்,” என்று இணை நிறுவனர் ரித்விக் ராஜ் கூறியுள்ளார்.
“இந்தியாவின் சிறார் சந்தை பிரிவு பரந்து விரிதிருக்கிறது. பெற்றோர்கள் அதிகம் செலவிட்டு வருகின்றனர். குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால், சில பிராண்ட்களே இதை காது கொடுத்து கேட்கின்றன. வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப சிறார்கள் விருப்பங்களும் அதிகரிக்கின்றன. இதை அறிந்து ஃபேம்யோ வடிவமைப்பு முதன்மையாகக் கொண்ட பாத்திரங்கள் சார்ந்த அணுகுமுறை கொண்டுள்ளது. இந்தியாவின் அடுத்த தலமுறைக்கான பிராண்டை உருவாக்கி வருகின்றனர்,” என ஐஏஎன் குழுமம் இணை நிறுவனர் பத்மஜா ரூபரேல் கூறியுள்ளார்.
”ஃபேம்யோவின் வலுவான பார்வை, பொருட்களின் தரம், வேகமான வளர்ச்சி வியக்க வைக்கிறது. கரீஷ்மா மற்றும் ரிதிவிக் படைப்பூக்கம், செயல்முறை ஒழுக்கம் மற்றும் சந்தை புரிதல் கொண்டுள்ளனர்,” என சென்னை ஏஞ்சல்ஸ் முதலீடு இயக்குனர் சதீஷ்குமார் அவன்கோட் கூறியுள்ளார்.
இந்த நிதி, புதிய அறிவிசார் சொத்துரிமையை உருவாக்க, பாத்திர வடிவமைப்பு, செயல்முறை திறன் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், என நிறுவனம் தெரிவிக்கிறது. அடுத்த 12 முதல் 24 மாதங்களில் நிறுவனம் தனது பிராண்டை நான்கு மடங்கு வளர வைத்து, சப்ளை செயின் மேம்பாடு மற்றும் ஐபி மேம்பாடு ஆகியவற்றை திட்டமிட்டுள்ளது. புதிய பொருட்களையும் அறிமுகம் செய்ய உள்ளது.
Edited by Induja Raghunathan