ஒரு போட்டித்தேர்வா நம் வாழ்க்கையை முடிவு செய்வது? தேர்வு வாழ்க்கையை முடிவு செய்யாது — இதை தனது வாழ்க்கையால் நிரூபித்தவர்தன் நோபல் விஞ்ஞானி தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
தோல்வியிலிருந்து தொடங்கிய வெற்றி!
இந்தியாவில் பல மாணவர்களுக்கு IIT-JEE தேர்வை வெல்வது ஒரு பெரிய கனவு. ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால் வாழ்க்கை முடிந்துவிடாது என்பதற்கான சிறந்த உதாரணம் ராமகிருஷ்ணன்.
தமிழ்நாட்டின் சிதம்பரத்தில்ல் 1952ல் பிறந்த அவர், IIT-JEE மட்டுமல்ல, கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரியிலும் சேர முடியவில்லை. ஆனால், அவர் இதை தோல்வியாகப் பார்க்கவில்லை. அதற்குப் பதிலாக, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
வடோதராவில் ஆரம்பமான அறிவியல் பயணம்!
அவர் தனது இயற்பியல் பட்டப்படிப்பை பரோடா மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் முடித்தார். அறிவியல் சூழலில் வளர்ந்தவர் — அவருடைய பெற்றோர்களும் விஞ்ஞானிகள். அங்கு கிடைத்த அடிப்படை அறிவும் ஆர்வமும், அவருடைய வாழ்க்கையை மாற்றிய முக்கிய கட்டமாக அமைந்தது.
இயற்பியலிலிருந்து உயிரியல் — ஒரு துணிச்சலான மாற்றம்!
பின்னர், வெங்கட்ராமன் அமெரிக்காவுக்கு சென்று தனது படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அவர் எடுத்த மிகப்பெரிய முடிவு — இயற்பியலிலிருந்து உயிரியல் துறைக்கு மாறியதே.
அவர் Yale University மற்றும் Brookhaven National Laboratory போன்ற இடங்களில் பணியாற்றினார். ஆரம்பத்தில் வேலை வாய்ப்புகளில் சிரமங்கள் இருந்தாலும், அவர் தனது ஆராய்ச்சியை நிறுத்தவில்லை.
ரிபோசம் ரகசியம் — உலகை கவர்ந்த கண்டுபிடிப்பு
ராமகிருஷ்ணனின் முக்கியமான ஆராய்ச்சி — ரிபோசம் (Ribosome). இது நம் உடலில் புரதங்களை உருவாக்கும் மிக முக்கியமான அணுக்கட்டமைப்பு.
அவர் ரிபோசமின் அணுக்கட்டமைப்பை வரைபடமாக கண்டுபிடித்தார். இது அறிவியல் உலகில் நீண்டநாள் இருந்த ஒரு புதிரைத் தீர்த்தது.
நோபல் பரிசு — உலகின் உயர்ந்த அங்கீகாரம்
இந்த மிகப்பெரிய சாதனைக்காக, 2009-ல் அவர் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். அவர் Thomas A. Steitz மற்றும் Ada Yonath ஆகியோருடன் இந்த விருதைப் பகிர்ந்துகொண்டார்.
பின்னர், அவர் Medical Research Council Laboratory of Molecular Biology-யில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
இந்தக் கதையின் உண்மை அர்த்தம் என்ன?
ராமகிருஷ்ணனின் வாழ்க்கை ஒரு பெரிய பாடத்தைக் கற்றுத் தருகிறது.
ஒரு தேர்வில் தோல்வி, வாழ்க்கையில் தோல்வி அல்ல. பாதை மாறினாலும் பயணம், மற்றும் இலக்கு மாற வேண்டிய அவசியம் இல்லை. முயற்சி இருந்தால் — உலகத்தையே நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்யலாம்.
“IIT-JEE கடக்க முடியவில்லை” என்ற வருத்தம் இருந்தாலும், “நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி” என்ற பெருமை அவரை உலகம் முழுவதும் உயர்த்தியது.
அதனால், ஒரு காகிதத்தில் எழுதப்படும் மதிப்பெண் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்காது — உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கும்.