+

கதை படித்தால் தினமும் ரூ.700 வருமானம் - ‘Look App’ முதலீட்டு மோசடி - அலர்ட் ரிப்போர்ட்!

அண்மையில் லுக் ஆப் என்ற செயலி மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேரிடம் முதலீட்டு மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக விரிவாக பார்ப்போம்.  ‘ஒருத்தர ஏமாத்தணும்னா அவர்கிட்ட கருணைய எதிர்பார்க்க கூடாது. அவ

அண்மையில் 'லுக் ஆப்' (Look App) என்ற செயலி மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேரிடம் முதலீட்டு மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக விரிவாகப் பார்ப்போம். 

‘ஒருத்தர ஏமாத்தணும்னா அவர்கிட்ட கருணைய எதிர்பார்க்க கூடாது. அவரோட ஆசைய தூண்டனும்...’ என சதுரங்க வேட்டை படத்தில் ஒரு வசனம் வரும். மோசடியாளர்களுக்கு இதுதான் வேதவாக்கு. அதை அடிப்படையாகக் கொண்டுதான் மக்களை ஏமாற்றி வருகின்றனர் பல மோசடி பேர்வழிகள். அப்படி மக்களின் ஆசையை தூண்டியதுதான் ‘லுக் ஆப்’. 

gi

லுக் ஆப் மோசடி என்ன?

ரூ.20,300 முதலீடு செய்தால் போதும். வீட்டில் இருந்தபடி தினமும் ரூ.700 வருவாய் ஈட்டலாம். இந்த ஆப் மூலம் தினமும் கதை படித்தால் 700 ரூபாய் சம்பாதிக்கலாம். இதான் டாஸ்க். இதை நம்பி முதலீடு செய்த மக்கள் சிலர் இப்போது பணத்தை இழந்து நிற்கின்றனர். பலர் இந்த செயலியை சுமார் 9 மாதங்கள் வரை பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இப்போதுதான் இந்த செயலி ஒரு மோசடி வேலை என்பதை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த முதலீட்டு மோசடி நடந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது என்ன?

இந்த லுக் ஆப் மோசடியால் கொடைக்கானல் பகுதியில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.2,250 முதல் ரூ.2.25 லட்சம் வரையில் மக்கள் தங்கள் பணத்தை இதில் இழந்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவராக ‘எம்எல்எம்’ பாணியில் லுக் ஆப் செயலியில் பலரும் இணைந்துள்ளனர். இதை பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். புதிதாக நபர்களை இணைத்தால் போனஸ் தரப்படும், என கூறப்பட்டுள்ளது. 

இந்த செயலியியை நம்பி பணம் முதலீடு செய்தவர்கள் சாதாரண மக்கள். விவசாயிகள், டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பணியாற்றுபவர்கள், கூலி தொழிலாளிகள் தான் இதில் அதிகம் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர். முதலீட்டுக்கு ஏற்ப ஆரம்பத்தில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த பணம் கூட தங்கள் வங்கிக் கணக்குக்கு யுபிஐ மூலமாக வந்துள்ளது. இது அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர். 

முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது பாதிக்கப்பட்ட ஒருவரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லுக் ஆப் பிரபலமானது எப்படி?

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் இந்த `லுக் ஆப்` செயலி கொடைக்கானல் பகுதியில் உள்ளவர்களுக்கு அறிமுகமாகி உள்ளது. இப்போது பாதிக்கப்பட்டவர்கள் அவர் மீது புகார் தெரிவித்துள்ளனர். தனக்கு லுக் ஆப் தொடர்பு நிர்வாகிகள் கமெண்ட் மட்டுமே கொடுப்பார்கள். வாட்ஸ்அப், போன் என எதிலும் அவர்கள் பேச மாட்டார்கள் என மதுரையை சேர்ந்த அந்த பெண் கூறியுள்ளார்.

செயலி மட்டுமல்லாது வேலைவாய்ப்பு முகாம் நடத்தி அதன் மூலமாகவும் ‘லுக் ஆப்’ செயலிக்கு முதலீடு திரட்டி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் திண்டுக்கல் காவல் கண்காளிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இதே ‘லுக் ஆப்’ மோசடி நடந்துள்ளது. அங்கும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கமிஷன் தொகை வராதது மற்றும் செயலி முடங்கிய காரணத்தால் மோசடியில் சிக்கியது தெரியவந்துள்ளது. 

Look App Scam


புதுச்சேரி போலீஸார் சொல்வது என்ன?

20,300 ரூபாய் கட்டினால் தினமும் ரூ.700 வரை வருமானம் பார்க்கலாம் என பார்ட்-டைம் வேலை போல ‘லுக் ஆப்’ என அறியப்படும் இந்த செயலி, வாட்ஸ்அப் தளத்தில் புரோமோட் செய்யப்பட்டுள்ளது. தினமும் அந்த செயலியில் வரும் கதையை படிக்க வேண்டும். இதன் மூலம் புதுச்சேரியில் அதிகளவில் மக்கள் பணம் முதலீடு செய்துள்ளனர். இந்த வகை மோசடியாளர்கள் முதலில் பணம் கொடுப்பது போல கொடுத்து பிறகு ஏமாற்றி விடுவார்கள். இந்த மோசடியால் பணத்தை இழந்தவர்கள் தற்போது புகார் அளித்துள்ளனர். இது போன்ற வேலை நிமித்தமாக வரும் மெசேஜ்களை மக்கள் நம்பி பணம் செலுத்த வேண்டாம், என புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

‘லுக் ஆப்’ மாதிரியான முதலீடு சார்ந்த மோசடியை கண்டுபிடிப்பது எப்படி?

இது தொடர்பாக அண்மையில் மேகாலயா மாநில போலீஸார் மக்களுக்கு சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். முதலீட்டு மோசடி குறித்த புகார்கள் அந்த மாநிலத்தில் அதிகரித்த நிலையில் போலீஸார் மக்களை அலர்ட் செய்தனர். அது பின்வருமாறு:

  • ’லுக் ஆன்லைன் ஜாப்’, ‘லுக் கம்பெனி’, ‘லுக்’, ‘லுக் கல்ச்சர் மீடியா லிமிடெட்’ உள்ளிட்ட பெயர்களில் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த நிறுவனத்தை நம்பி பணம் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 

  • ’பம்ப் அண்ட் டம்ப்’ என்ற பாணியில் இந்த மோசடி திட்டமிட்டு நடந்துள்ளதாக சைபர் கிரைம் வல்லுநர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

  • முதலில் வேலைவாய்ப்பு போல பாதிக்கப்பட்ட மக்களை மோசடியாளர்கள் இணையவழியில் சமூக வலைதளம் மூலம் அணுகுவார்கள். பின்னர் குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் ஈட்டலாம் என சொல்லி முதலீடு செய்ய வைப்பார்கள். 

  • இதில் பாதிக்கப்பட்டவர்கள் முதலீடு செய்து விட்டால் தொடர்ந்து கூடுதல் தொகையை முதலீடு செய்யும் வகையில் அழுத்தம் தரப்படும் என சைபர் கிரைம் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

  • மேலும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலம் கமிஷன் தொகை பெறலாம் எனவும் ஆசை காட்டுவார்கள். அதை நம்பி ஏமாறக்கூடாது.

  • இந்த மோசடி தொடர்பாக மக்களுக்கு வரும் மெசேஜ்களை காவல்துறைக்கு அனுப்புமாறும், தங்கள் சுற்றங்களை இது குறித்து அலர்ட் செய்யுமாறும், தேசிய சைபர் குற்றப்பிரிவை தொடர்பு கொண்டு மக்கள் புகார் தரலாம் என்றும் மேகாலயா போலீஸார் கூறியுள்ளனர். 

இந்த வகை மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

  • பொதுவாக எந்தவொரு செயலியையும் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து டவுன்லோடு செய்து, மக்கள் அதை தங்கள் போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம் என டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர். 
  • ஆண்ட்ராய்டு போன் என்றால் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் போன் என்றால் ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்றவற்றை பயன்படுத்தி மொபைல் போன்களில் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 
  • ஏனெனில், ஆப் ஸ்டோர்களில் நம்பகத்தன்மை வாய்ந்த செயலிகள் மட்டுமே கிடைக்கும். மோசடி செயலிகளை டவுன்லோட் செய்ய முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் இந்தியாவில் சில கடன் செயலிகள் கூகுள் மற்றும் ஆப்பிள் முடக்கியுள்ளதை கருத்தில் கொள்ளலாம். 
  • அதோடு, மோசடி செயலிகள் பெரும்பாலும் தேர்ட் பார்ட்டி செயலிகளாக போன்களில் நேரடியாக லிங்க் மூலம் அல்லது apk file மூலம் இன்ஸ்டால் செய்யப்படும். அதனால் மக்கள் அதை நம்பாமல் கவனமாக இருக்கலாம். 
  • இந்த வகை மோசடி செயலிகள் வெளிநாடுகளில் இருந்து ஆப்பிரேட் ஆகின்றன. அதனால் Money Mule அல்லது பாதிக்கப்பட்ட நபரின் கணக்கில் இருந்து பணம் யுபிஐ மூலம் வங்கியில் செலுத்தப்படும். அதனால் மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கூட வழக்கு பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை சம்மந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 
  • இதை தவிர்க்க மொபைல் போனில் பயன்படுத்தும் லிங்குகள், செயலிகளில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். 


Edited by Induja Raghunathan

facebook twitter