+

பணத்தை நிர்வகிப்பது எப்படி? - 30 வயதுக்குள் கற்க வேண்டிய 7 பாடங்கள்!

இந்த 7 பாடங்கள் உங்கள் இருபதுகளுக்கான பொருளாதார குறிப்புகள் மட்டுமல்ல; அவை உங்கள் வாழ்க்கையின் பாதையை மாற்றக்கூடிய மனநிலை மாற்றங்களாகும்.

உங்கள் இருபதுகள் என்பது பெரும்பாலும் உற்சாகம், பரிசோதனை மற்றும் சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றால் நிரம்பியவை. ஆனால், அவற்றில் பல தசாப்தங்களுக்கு எதிரொலிக்கும் பொருளாதார தவறுகளும் கூட நிறைந்திருக்கலாம்.

புதிய ஐபோனுக்கு அதிக பணம் செலவழிப்பது, வாழ்க்கையின் அழுத்தத்தால் கடனில் சிக்குவது, அல்லது காதலுக்காக உணர்ச்சிபூர்வமான முடிவுகளை எடுப்பது என எதுவாக இருந்தாலும், இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விலை உண்டு.

நீங்கள் 30 வயதை அடைவதற்கு முன்பு, பெரிய பொருளாதார முடிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். ஒரு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது, உங்கள் முதல் வாகனத்தை வாங்குவது, வேலைகளை மாற்றுவது, வாடகையை நிர்வகிப்பது மற்றும் முதலீடு செய்வது. இவை ஒவ்வொன்றும் மதிப்பு, முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால சிந்தனை பற்றிய பாடங்களை கொண்டுள்ளன.

இது வெறும் பணம் சேமிப்பதைப் பற்றியது மட்டுமல்ல. பணத்துடன் இணைந்து செயல்படும் வாழ்க்கையை உருவாக்குவது பற்றியது.

இந்த 7 பாடங்கள் உங்கள் இருபதுகளுக்கான பொருளாதார குறிப்புகள் மட்டுமல்ல; அவை உங்கள் வாழ்க்கையின் பாதையை மாற்றக்கூடிய மனநிலை மாற்றங்களாகும். உங்கள் 20-களில் தவிர்க்க வேண்டிய பொருளாதார தவறுகள்:

1. ஒரு போன் உங்கள் மன அமைதியை கெடுக்கக் கூடாது

ஒரு புதிய ரு.1.2 லட்சம் ஐபோன் அழகாகத் தோன்றலாம். ஆனால் இஎம்ஐ, தாமதக் கட்டணங்கள் அல்லது உங்கள் சேமிப்பில் செலவு செய்தல் போன்ற மன அழுத்தத்துக்கு, அது மதிப்பான ஒன்றா என்பதை சிந்திக்கவும்.

மாதாந்திர கட்டணத்தை நீங்கள் செலுத்த முடியும் என்பதால், அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று அர்த்தமல்ல. விலைக்கும் செலவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிய கற்றுக்கொள்ளுங்கள். செலவில் மன அழுத்தம், நேரம் மற்றும் எதிர்கால தியாகங்கள் ஆகியவை அடங்கும்.

பயன்பாட்டுக்காக தொழில்நுட்பத்தை வாங்குங்கள், அந்தஸ்துக்காக அல்ல. உங்கள் போன் ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு பொறியாக இருக்கக் கூடாது.

money lessions

2. காதல் இலவசம் - ஆனால் வாழ்க்கைத் துணை..?

காதல் உறவு என்பது உணர்வுகளைப் பற்றியது மட்டும் அல்ல. ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது நீங்கள் நினைப்பதை விட உங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பகிரப்பட்ட கடன்கள், நிதி இலக்குகள், செலவு பழக்கங்கள் மற்றும் தொழில் திட்டமிடல் கூட இதில் அடங்கும்.

உங்கள் பொருளாதார இலக்குகளை மதிக்கும் ஒருவரை காதலியுங்கள். உணர்வுரீதியான இணக்கம் முக்கியமானதுதான். ஆனால் பொருளாதார பழக்கவழக்கங்களை சீரமைப்பதும் முக்கியமானது.

காதலுக்கு ‘எஸ்’ சொல்லும் முன், வருமானம், சேமிப்பு, கடன் மற்றும் நிதி இலக்குகளைப் பற்றிப் பேசுங்கள். வெறும் அன்பு மட்டுமே உங்கள் வாடகையைக் கொடுக்காது.

3) பொழுதுபோக்குகள் பர்ஸை காலியாக்கி விடக் கூடாது

வார இறுதி அவுட்டிங், டின்னர் ட்ரீட்கள், புதிய கருவிகள் மற்றும் வேகமான ஃபேஷன் ஆகியவை விலையுயர்ந்த ஆடம்பரங்களாக மாறக்கூடும். சமூக ஊடகங்கள் செலவினங்களை கவர்ந்திழுக்கின்றன. ஆனால், அந்த ரீல்களுக்குப் பின்னால் காலியாகப் போகும் உங்கள் வங்கிக் கணக்கை நீங்கள் பார்ப்பதில்லை.

பொருளாதார நம்பிக்கை என்பது தாமதமான திருப்தியிலிருந்து வருகிறது. இப்போது “இல்லை” என்று சொல்வது, பின்னர் நடக்கப் போகும் பெரிய விஷயத்துக்கு “ஆம்” என்று சொல்வது போலாகும்.

money lessions

மகிழ்ச்சிக்காக பட்ஜெட் ஒதுக்கலாம். ஆனால், உங்கள் நீண்டகால இலக்குகளுடன் ஒத்துப்போகாத பொழுதுபோக்குகளை நோக்கி ஓட வேண்டாம்.

4. குறைந்த வாடகை, நிறைவான வாழ்க்கை

உங்கள் முதல் வாடகை அபார்ட்மெண்ட் என்பது உங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. ஆனால், ஓர் ஆடம்பரமான பகுதியில் வாடகைக்காக அதிகமாக செலவழிப்பது உங்கள் சேமிப்பை, முதலீடு செய்யும் திறனைக் கட்டுப்படுத்தலாம்.

30% விதியைப் பின்பற்றுங்கள்: வீட்டு வாடகை உங்கள் மாத வருமானத்தில் 30%-க்கும் அதிகமான தொகையை விழுங்க விடாதீர்கள்.

நீங்கள் வசிக்கும் இடம் உங்கள் மதிப்பை வரையறுக்க விடாதீர்கள். ஆரம்பகாலங்களில் ஓர் எளிமையான வாழ்க்கை முறை என்பது நீங்கள் செல்வத்தை விரைவாக உருவாக்க உதவும்.

5. வேலை என்பது உங்கள் நிதித் திட்டம் அல்ல!

நிலையான சம்பளம் பாதுகாப்பானதாக உணர வைக்கும். ஆனால், அதை மட்டுமே உங்கள் ஒரே பாதுகாப்பு வலையாக நம்பாதீர்கள். பணி நீக்கங்கள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தொழில்துறை மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

உங்கள் வருமானத்தில் குறைந்தது 15-20% முதலீடு செய்ய இலக்கு வைக்கவும். உங்கள் எதிர்காலம் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.

பல வருமான வழிகளே நிதி சுதந்திரத்துக்கான திறவுகோல். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்க பார்ட் டைம் வேலைகளை உருவாக்குங்கள், முதலீடு செய்யுங்கள் மற்றும் திறனை மேம்படுத்துங்கள்.

6. சேமிப்பு Vs முதலீடு - வித்தியாசம் கற்பீர்

சேமிப்புக் கணக்கில் உங்கள் பணத்தை சேமித்து வைப்பது ஒரு நல்ல தொடக்கமாகும். ஆனால் அது மட்டுமே போதாது. பணவீக்கம் அமைதியாக உறங்கும் பணத்தை விழுங்கி விடும். உங்கள் பணம் வளரவில்லை என்றால், அது சுருங்கி விடும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது பணவீக்கத்தை வென்று உண்மையான செல்வத்தை உருவாக்குவதற்கான வழியாகும்.

money lessions

சிறியதாகத் தொடங்குங்கள். மியூச்சுவல் ஃபண்டுகள், எஸ்ஐபி மற்றும் குறியீட்டு நிதிகள் புதிதாக தொடங்குபவர்களுக்கு ஏற்றவை. நீங்கள் எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவுக்கு பலன் அதிகமாகும்.

7. கிரெடிட் கார்டுகள் பொம்மைகள் அல்ல, கருவிகள்

கிரெடிட் கார்டுகள் கடன் பெறுவதற்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தினால் அவை ஒரு பொறியாகவும் மாறக்கூடும்.

கடனில் நுழைவது எளிது, வெளியேறுவது கடினம். உங்கள் கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சியை அறிந்து கொள்ளுங்கள், முழுமையாக செலுத்துங்கள், உங்களிடம் உள்ளதை விட அதிகமாக செலவிட வேண்டாம்.

கிரெடிட் கார்டுகளை உணர்வுபூர்வமான செலவுகளுக்கு அல்லாமல், திட்டமிட்ட செலவுகளுக்கு பயன்படுத்தவும். ஒரே ஒரு ஸ்வைப் மூலம் கடனை திருப்பிச் செலுத்த பல மாதங்கள் ஆகக்கூடாது.

பணம் உங்கள் முடிவுகளை பெரிதாக்குகிறது. உங்கள் 20-களின் நல்ல பழக்கவழக்கங்களே உங்கள் 30-கள் மற்றும் அதற்குப் பிறகு செல்வமாக மாறும். கெட்ட பழக்கவழக்கங்களை பற்றி கேட்கிறீர்களா? அவை கடனாகவும், வருத்தமாகவும், தவறவிட்ட வாய்ப்புகளாகவும் மாறும்.

பொருட்களை தேர்ந்தெடுப்பதில் இருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது வரை, ஒவ்வொரு முடிவும் உங்கள் நிதி எதிர்காலத்தை உருவாக்குவோ அல்லது கடன் வாங்கவோ வழிவகுக்கும்.

எனவே, இப்போதே தொடங்குங்கள். பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பொருளாதார சுதந்திரம் 30 வயதில் தொடங்குவதில்லை. அது அதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது.


Edited by Induja Raghunathan

facebook twitter