+

Gold Rate Chennai: நேற்று ரூ.2,500 உயர்ந்த நிலையில், இன்று மாற்றம் இல்லை - தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டுமா?

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது. இது, தங்கம் விலை உயர்விலும் எதிரொலிக்கிறது. தற்போது தங்கம் விலை ரூ.99,000-ஐ தொடுகிறது.

ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,500 அளவில் உயர்ந்த நிலையில், இன்று மாற்றம் ஏதுமில்லை. எனினும், தங்கம் விலை புத்தாண்டுக்குள் ரூ.1 லட்சத்தை எட்டிவிடுமோ என்ற அச்சம் நீடிக்கிறது.

சென்னையில் வெள்ளிக்கிழமை இருமுறை தங்கம் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.320 உயர்ந்து ரூ.12,370 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,560 உயர்ந்து ரூ.98,960 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.13,494 ஆகவும், சவரன் விலை ரூ.1,07,952 ஆகவும் விற்பனை ஆனது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது. இது, தங்கம் விலை உயர்விலும் எதிரொலிக்கிறது. தற்போது தங்கம் விலை ரூ.99,000-ஐ தொடுகிறது. இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை என்றாலும் கூட, வெள்ளி விலை வெகுவாக குறைந்துள்ளது.

தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (13.12.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.12,370 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.98,960 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.13,494 ஆகவும், சவரன் விலை ரூ.1,07,952 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
gold rate chennai

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (13.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.6 குறைந்து ரூ.210 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.6,000 குறைந்து ரூ.2,10,000 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை இனி?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.55 ஆக இருந்தது.

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளதுடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வர்த்தக நிபுணர்கள் ஏற்கெனவே கணித்ததன்படி, இந்த ஆண்டு முடிவதற்குள் - அதாவது இந்த டிசம்பருக்குள் ரூ.1 லட்சத்தை எட்டக் கூடும் எனத் தெரிகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,370 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.98,960 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,494 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,07,952 (மாற்றமில்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,370 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.98,960 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,494 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,07,952 (மாற்றமில்லை)


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter