
இன்றைய விரைவான உலகில், வேகமே வெற்றிக்கு வழி என்று நம்புவதற்கு நாம் பழக்கப்பட்டுள்ளோம். நீங்கள் வேகமாகவும், பரபரப்பாகவும் இருந்தால் உங்கள் சாதனைகள் மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றும். நாம் பரபரப்பு கலாச்சாரத்தைக் கொண்டாடுகிறோம், மல்டி டாஸ்கிங் முறையை மேன்மைப்படுத்துகிறோம்.
காலக்கெடு, பதவி உயர்வுகளை நோக்கி ஓடுகிறோம். அதேநேரத்தில், சோர்வுடனும், மன அழுத்தத்துடனும், உண்மையிலேயே முக்கியமானவற்றை விட்டுவிடுகிறோம். ஆனால், இந்த இடைவிடாத ஓட்டப்பந்தயம் நமது ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தெளிவை இழக்கச் செய்தால் என்ன செய்வது?
வேகத்தைக் குறைப்பது பலவீனம் அல்லது சோம்பேறித்தனத்தின் அறிகுறியாக இல்லாமல், சுய பாதுகாப்பு மற்றும் ஞானத்தின் தீவிரமான செயலாக இருந்தால் எப்படி இருக்கும்?
சிறந்த, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான திறவுகோல் என்பது வேகமாகச் ஓடுவதில் இல்லை. மாறாக நிதானமாகவும், மனப்பூர்வமாகச் செய்வதிலும் இருக்கிறது.

படம்: மெட்டா ஏஐ
‘மெதுவாக வாழ்வது’ என்பது பயனற்றதாகவோ அல்லது செயலற்றதாகவோ இருப்பது பற்றியது அல்ல. சமநிலை மற்றும் இருப்பின் மூலம் வெற்றியை மறுவரையறை செய்வதை பற்றியது. உறவுகள், வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் மன அமைதி போன்ற முக்கியமானவற்றில் கவனம் செலுத்த உங்கள் நேரத்தையும் சக்தியையும் மீட்டெடுப்பது பற்றியது.
இந்தக் கட்டுரையில், 'மெதுவாக வாழ்வது, சிறப்பாக வாழ்வது' என்ற புதிய வெற்றிக் குறியீடு பற்றி பார்க்கலாம். வேகத்தைக் குறைப்பது ஏன் உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது, உங்கள் நல்வாழ்வை மேம்படுத்துகிறது, மேலும், வேலை மற்றும் வாழ்க்கையுடனான உங்கள் உறவை மாற்றுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
முடிவில்லாத பரபரப்பால் நீங்கள் சோர்வடைந்திருந்தால் அல்லது தொடர்ந்து செயல்பட வேண்டிய அழுத்தத்தை உணர்ந்திருந்தால், இந்தப் புதிய கண்ணோட்டம் உங்கள் சொந்த விதிமுறைகளில் செழிக்க உங்களை ஊக்குவிக்கும்.
1. வேகம் ஏன் எப்போதும் பலமாக இருக்காது?
வேகத்தின் மீதான அவசர முடிவுகள், மேலோட்டமான வேலை மற்றும் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எல்லாமே ஒரு வேகத்தில் ஓடும்போது, நிலையான முன்னேற்றம், கற்றல் மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றின் அழகை நீங்கள் இழக்கிறீர்கள்.
இது ஏன் முக்கியமானது? - வேகத்தைக் குறைப்பது ஆழ்ந்த கவனம், சிறந்த தரம் மற்றும் நிலையான வெற்றியைப் பெற அனுமதிக்கிறது.
2. உற்பத்தித் திறனை விட உயிர்ப்போடு இருத்தலுக்கு முக்கியத்துவம்
உண்மையான வெற்றி என்பது நீங்கள் எத்தனை பணிகளைச் செய்கிறீர்கள் என்பதன் மூலம் அளவிடப்படுவதில்லை; மாறாக ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் எவ்வளவு உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. வேலையிலும் வாழ்க்கையிலும் மனநிறைவு, தெளிவு, மகிழ்ச்சியை அது வளர்க்கிறது.
இது ஏன் முக்கியம்? - உயிர்ப்புடன் இருப்பது வேலையில் பதற்றத்தைக் குறைத்து திருப்தியை அதிகரிக்கிறது, சாதனைகளை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.

படம்: மெட்டா ஏஐ
3. ஓய்வு மற்றும் மீட்சியின் சக்தி
ஓய்வு என்பது ஒரு வெகுமதி அல்ல, அது ஒரு தேவை. மீளும் தருணங்கள் படைப்பாற்றலைத் தூண்டுகின்றன, முடிவெடுப்பதை மேம்படுத்துகின்றன, மேலும் சோர்வைத் தடுக்கின்றன.
இது ஏன் முக்கியமானது? - ஓய்வுக்கு முன்னுரிமை அளிப்பது நீண்ட கால செயல்திறனை அதிகரிக்க வழிவகுக்கிறது,
4. நோக்கத்துடன் வாழ்தல்
நோக்கத்துடன் வாழ்வது என்பது தொடர் பரபரப்பை விட, உங்கள் மதிப்புகள் மற்றும் இலக்குகளுடன் ஒத்துப்போகும் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுப்பதாகும்.
இது ஏன் முக்கியமானது? - நோக்கத்துடன் கூடிய வாழ்க்கை என்பது நிறைவையும் கவனத்தையும் தருகிறது, கவனச்சிதறல்கள் மற்றும் அதிகப்படியான சுமைகளைக் குறைக்கிறது.
5. நிலையான வெற்றியை உருவாக்குதல்
காலப்போக்கில் பராமரிக்கக் கூடிய பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டே நிலையான வெற்றி கட்டமைக்கப்படுகிறது. வேகத்தைக் குறைப்பது உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை வளர்க்கும் வழக்கங்களை வளர்க்க உதவுகிறது.

படம் மெட்டா ஏஐ
இது ஏன் முக்கியமானது? - இது சோர்வைத் தடுக்கிறது மற்றும் எதிர்கால பயணத்திற்கு உங்களை உற்சாகப்படுத்துகிறது.
மெதுவாக வாழ்வது என்பது லட்சியத்தையோ அல்லது உந்துதலையோ கைவிடுவது என்று அர்த்தமல்ல. இதன் பொருள் புத்திசாலித்தனமாக வேலை செய்வது, வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பது. இந்த புதிய வெற்றிக் குறியீடு, பரபரப்பான கலாச்சாரத்தை எதிர்கொண்டு பொறுமையில் சக்தியைக் கண்டறிய உங்களை அழைக்கிறது.
இன்று கொஞ்சம் வேகத்தைக் குறைத்து, ஓய்வை முன்னுரிமைப்படுத்தி, ஓர் அர்த்தமுள்ள பணியில் ஆழமாக கவனம் செலுத்துவதன் மூலம் தொடங்குங்கள். காலப்போக்கில், மெதுவாக வாழ்வது என்பது உண்மையிலேயே சிறப்பாக வாழ்வது என்பதைக் தெரிந்துகொள்வீர்கள்.
மூலம்: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan