பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நுகர்வோருக்கு விலை அதிகரிக்காது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரியால் சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பு, மற்றும் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் மத்திய அரசு கலால் வரி உயர்வை அறிவித்துள்ளது.
இந்த வரி, பெட்ரோல் விலை மீது எப்போது முதல் தாக்கம் செலுத்தும் என்பது தெரியாவிட்டாலும், உடனடியாக நுகர்வோருக்கு பாதிப்பு இருக்காது, என எண்ணெய் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021 ஏப்ரலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை சரிந்திருந்தாலும், நுகர்வோருக்கு விலை குறைப்பு இருக்காது, ஆனால் அரசு கலால் வரி உயர்வு மூலம் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது, என எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
கடைசியாக மக்களவைத்தேர்தலுக்கு முன் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை தொடருந்து இதே நிலையில் இருந்தால் பெட்ரோல் விலை குறைக்கப்படலாம் என அண்மையில் எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியிருந்தார்.
ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும் அரசு விலை குறைப்பை அறிவிக்காமல், கலால் வரியை உயர்த்தியுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவை மீறி மத்திய அரசு மக்களை சுரண்ட முற்படுவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan