Gold Rate Chennai: தங்கம் விலை ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் புதிய உச்சம் - காரணம் என்ன?

10:38 AM Sep 20, 2025 | Jai s

ஆபரணத் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரன் விலை ரூ.82,320 ஆக உயர்ந்திருப்பது நகை வாங்க விழைவோருக்கு கவலை அளித்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.10,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.81,840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.11,160 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.89,280 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை மீண்டும் ரூ.82,000-ஐ கடந்து புதிய உச்சம் அடைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. சவரன் விலை ரூ.82,320 ஆக இருப்பதால் சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (20.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.10,290 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.82,320 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 உயர்ந்து ரூ.11,226 ஆகவும், சவரன் விலை ரூ.528 உயர்ந்து ரூ.89,808 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (20.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.145 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.1,45,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். அந்த வகையில், தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.03 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. அத்துடன், பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது. எனவே, தங்கம் விலை உயர்வுப் போக்கு தொடர்கிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,290 (ரூ.60 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.82,320 (ரூ.480 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,226 (ரூ.66 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,808 (ரூ.528 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,290 (ரூ.60 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.82,320 (ரூ.480 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,226 (ரூ.66 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,808 (ரூ.528 உயர்வு)


Edited by Induja Raghunathan