+

Gold Rate Chennai: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை ரூ.1,600 குறைவு!

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 குறைந்தது. சவரன் விலை ரூ.1,12,000 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று வெகுவாக குறைந்தது.

ஆரணத் தங்கத்தின் விலை நேற்று கடுமையாக உயர்ந்த நிலையில், அதே வேகத்தில் இன்று சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.340 உயர்ந்து ரூ.14,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.371 உயர்ந்து ரூ.15,491 ஆகவும், சவரன் விலை ரூ.2,968 உயர்ந்து ரூ.1,23,928 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 குறைந்தது. சவரன் விலை ரூ.1,12,000 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று வெகுவாக குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (9.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.200 குறைந்து ரூ.14,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,600 குறைந்து ரூ.1,12,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.218 குறைந்து ரூ.15,273 ஆகவும், சவரன் விலை ரூ.1,744 குறைந்து ரூ.1,22,184 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (9.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.57 ஆக உள்ளது

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடாவில் பதற்றம் தணிந்துள்ளது. தற்போது, பங்குச் சந்தையின் பக்கம் முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியுள்ளது. தங்கம் மீதான முதலீடு வெகுவாக குறைந்ததால், ஆபரணத் தங்கம் விலையும் சரிந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,000 (ரூ.200 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,000 (ரூ.1,600 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,273 (ரூ.218 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,164 (ரூ.1,744 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,000 (ரூ.200 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,000 (ரூ.1,600 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,273 (ரூ.218 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,164 (ரூ.1,744 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter