ஆபரணத் தங்கம் விலை இறங்கிய வேகத்தில் பல மடங்கு அதிகரித்து வருவது, பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,700 அளவுக்கு உயர்ந்தது பல தரப்பினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.185 உயர்ந்து ரூ.8,410 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,480 உயர்ந்து ரூ.67,280 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு ரூ.9,174 ஆகவும், சவனுக்கு ரூ.73,392 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை புதன்கிழமை ஒரே நாளில் இரண்டு முறை ஏற்றம் கண்ட நிலையில், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ரூ.68,500-ஐ நெருங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (10.4.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.8,560 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,200 உயர்ந்து ரூ.68,480 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.164 உயர்ந்து ரூ.9,338 ஆகவும், சவரன் விலை ரூ.1,312 உயர்ந்து ரூ.74,704 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (10.4.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்து ரூ.1,07,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி நிலவுகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வரிவிதிப்பு யுத்தம் நாளுக்கு நாள் வலுத்த வண்ணம் இருப்பதால், சர்வதேச அளவில் பொருளாதார தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் தங்கத்தை நோக்கியே முதலீட்டாளர்கள் பார்வை மீண்டும் திரும்பியுள்ளதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை குறையுமா, கூடுமா?
பொதுமக்களிடம் தற்போது இருக்கும் ஒரே கேள்வி, ‘தங்கம் விலை குறையுமா, கூடுமா?’ என்பதே. இதற்கு பதில் ‘சந்தேகம்’தான் என்றாலும் கூட, ட்ரம்ப்பின் சமீபத்திய அறிவிப்பின்படி, சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கான வரிவிதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது இப்போது ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகப் போக்குக்கு வித்திட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை. ட்ரம்பின் புதிய ‘நிதான’ முடிவால் பங்குச் சந்தைகள் மீண்டும் தங்கம் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,560 (ரூ.150 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.68,480 (ரூ.1,200 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,338 (ரூ.164 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,704 (ரூ.1,312 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,560 (ரூ.150 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.68,480 (ரூ.1,200 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,338 (ரூ.164 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,704 (ரூ.1,312 உயர்வு)
Edited by Induja Raghunathan