Gold Rate Chennai: சற்றே குறைந்த தங்கம் விலை - அதிரடிக்குப் பின் ஆறுதல் தொடருமா?

11:45 AM Sep 24, 2025 | Jai s

அதிரடி மேல் அதிரடியாக, ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85,000-ஐ தாண்டி வரலாறு படைத்த நிலையில், இன்று கொஞ்சம் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் இரு முறை உயர்வு கண்டது. 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.210 உயர்ந்து ரூ.10,640 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,680 உயர்ந்து ரூ.85,120 ஆகவும் வரலாறு காணாத உச்சத்தில் விற்பனை ஆனது. 24 காரட் சுத்தத் தங்கமும் கடுமையாக உயர்ந்தது.

தங்கம் விலை இன்று ரூ.320 குறைந்தாலும் கூட, சவரன் விலை என்பது ரூ.85,000-க்கு நெருக்கமாகவே இருக்கிறது. இன்றைய விலை குறைவு என்பது தொடருமா என்பது சந்தேகம்தான். எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (24.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.10,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.84,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.11,564 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.92,512 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (24.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.150 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,50,000 ஆகவும் நீடிக்கிறது.

தங்கம் விலை இனி?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். அந்த வகையில், தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.77 ஆக வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த 4 மாதங்களில் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டினாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,600 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.84,800 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,564 (ரூ.44 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.92,512 (ரூ.352 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,500 (ரூ.70 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.84,000 (ரூ.560 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,455 (ரூ.77 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.91,640 (ரூ.616 உயர்வு)


Edited by Induja Raghunathan