ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வெகுவாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கவலையை தந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை தங்கம் விலை வெகுவாக குறைந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,750 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,10,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,000 ஆகவும், சவரன் விலை ரூ.1,20,000 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800 ஆக இருக்கிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (3.4.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.13,850 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 உயர்ந்து ரூ.15,109 ஆகவும், சவரன் விலை ரூ.872 உயர்ந்து ரூ.1,20,872 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (3.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,55,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.65 ஆக உள்ளது
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. தற்போது, தங்கம் மீதான முதலீடு சற்றே உயர்ந்ததால் ஆபரணத் தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,850 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,800 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,109 (ரூ.109 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,872 (ரூ.873 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,850 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,800 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,109 (ரூ.109 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,872 (ரூ.873 உயர்வு)
Edited by Induja Raghunathan