+

Gold Rate Chennai: சற்றே குறைந்த தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று சற்றே குறைவு என்றாலும் கூட, சவரன் விலை தற்போது ரூ.82,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. வரும் நாட்களில் தங்கம் விலை கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மீண்டும் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளி விலையில் இன்று கொஞ்சம் சரிவு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.10,280 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.82,240 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.11,215 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.89,720 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை இன்று சற்றே குறைவு என்றாலும் கூட, சவரன் விலை தற்போது ரூ.82,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. வரும் நாட்களில் தங்கம் விலை கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று சற்றே குறைந்தது.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (17.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.10,270 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.82,160 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.11,204 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.89,632 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (17.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.142 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்து ரூ.1,42,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold rate today

தங்கம் விலை இனி?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.87.77 என்ற அளவில் சற்றே மீண்டுள்ளது. மேலும், பங்குச் சந்தையிலும் சற்றே ஏற்றம் நிலவுகிறது. இதன் எதிரொலியாகவே தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் நிலைமை மாறலாம் எனத் தெரிகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,270 (ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.82,160 (ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,204 (ரூ.11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,632 (ரூ.88 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,270 (ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.82,160 (ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,204 (ரூ.11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,632 (ரூ.88 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter