+

Gold Rate Chennai: உயர்வுக்குப் பின் சரிவு; தங்கம் விலை ரூ.320 குறைவு - இது தொடருமா?

தங்கம் விலை இன்று வெகுவாக குறைந்தாலும், இந்தியாவுக்கு 25% வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளது, அடுத்தடுத்த நாட்களில் தாக்கம் தரலாம் என அஞ்சப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த மறுநாளே சரிவைக் கண்டுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.9,210 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.73,680 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ரூ.10,048 ஆகவும், சவரன் விலை ரூ.528 உயர்ந்து ரூ.80,384 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை இன்று வெகுவாக குறைந்தாலும், இந்தியாவுக்கு 25% வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளது, அடுத்தடுத்த நாட்களில் தாக்கம் தரலாம், என அஞ்சப்படுகிறது. தற்போது சவரன் விலை தொடர்ந்து ரூ.73,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. சுப காரியங்களுக்கு தேவையெனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். இன்று வெள்ளி விலையும் வெகுவாக குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (31.7.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.9,210 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.73,330 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.45 குறைந்து ரூ.10,003 ஆகவும், சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.80,024 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (29.7.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.125 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்து ரூ.1,25,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவுக்கு 25% வரியை ட்ரம்ப் விதித்திருப்பது தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் எதிரொலித்தாலும் கூட, சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால் தங்கம் மீதான முதலீடு சற்றே குறைந்து, அதன் தேவையும் சரிந்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,210 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,330 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,003 (ரூ.45 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.80,024 (ரூ.360 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,210 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,330 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,003 (ரூ.45 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.80,024 (ரூ.360 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter