+

Gold Rate Chennai: தங்கம் விலை ரூ.800 குறைவு; வெள்ளி விலையும் சரிவு!

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360 ஆக உள்ளது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 அளவில் குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் வெகுவாக குறைந்தது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை காலையில் இறக்கமும், மாலையில் ஏற்றமும் நிலவியது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,770 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,10,160 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,022 ஆகவும், சவரன் விலை ரூ.1,20,176 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360 ஆக உள்ளது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 அளவில் குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (31.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.13,670 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.1,09,360 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.14,913 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.1,19,304 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (31.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.03 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. தற்போது, லாப நோக்கத்துடன் தங்கம் விற்கப்பட்டு வருவதால் ஆபரணத் தங்கம் விலையும் குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,670 (ரூ.100 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,09,360 (ரூ.800 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,913 (ரூ.109 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,304 (ரூ.1,19,304 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,670 (ரூ.100 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,09,360 (ரூ.800 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,913 (ரூ.109 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,304 (ரூ.1,19,304 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter