ஆபரணத் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரன் விலை ரூ.83,000-ஐ நெருங்கி இருப்பது நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.10,290 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.82,320 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 உயர்ந்து ரூ.11,226 ஆகவும், சவரன் விலை ரூ.528 உயர்ந்து ரூ.89,808 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து ரூ.82,880 ஆக புதிய உச்சம் அடைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சவரன் விலை ரூ.83,000-ஐ நெருங்கியதால் சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (22.9.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.10,360 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.82,880 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து ரூ.11,302 ஆகவும், சவரன் விலை ரூ.608 உயர்ந்து ரூ.90,416 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (22.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.148 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்து ரூ.1,48,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். அந்த வகையில், தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.12 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. அத்துடன், பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது. எனவே, தங்கம் விலை உயர்வு இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,360 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.82,880 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,302 (ரூ.76 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.90,416 (ரூ.608 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,360 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.82,880 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,302 (ரூ.76 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.90,416 (ரூ.608 உயர்வு)
Edited by Induja Raghunathan