+

Gold Rate Chennai: அடுத்த ஷாக் - தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,720 உயர்வு!

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,720 உயர்ந்தது. சவரன் விலை ரூ.1,13,600 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று வெகுவாக உயர்ந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,720 அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 குறைந்து ரூ.13,860 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 குறைந்து ரூ.15,120 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 குறைந்து ரூ.1,20,960 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,720 உயர்ந்தது. சவரன் விலை ரூ.1,13,600 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று வெகுவாக உயர்ந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (8.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.340 உயர்ந்து ரூ.14,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.371 உயர்ந்து ரூ.15,491 ஆகவும், சவரன் விலை ரூ.2,968 உயர்ந்து ரூ.1,23,928 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (8.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ.2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.52 ஆக உள்ளது

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடாவில் பதற்றம் தணிந்துள்ளது. தற்போது, தங்கம் மீதான முதலீடு வெகுவாக கூடியதால், ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,200 (ரூ.340 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,600 (ரூ.2,720 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,491 (ரூ.371 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,928 (ரூ.2,968 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,200 (ரூ.340 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,600 (ரூ.2,720 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,491 (ரூ.371 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,928 (ரூ.2,968 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter