Gold Rate Chennai: 1 சவரன் தங்கம் விலை ரூ.160 குறைந்து ரூ.81,760 - புதிய உச்சம் தொட்ட வெள்ளி!

11:06 AM Sep 13, 2025 | Jai s

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை எட்டி வியப்பூட்டியுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.90 உயர்ந்து ரூ.10,240 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.720 உயர்ந்து ரூ.81,920 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.98 உயர்ந்து ரூ.11,171 ஆகவும், சவரன் விலை ரூ.784 உயர்ந்து ரூ.89,968 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை இன்று ரூ.160 குறைந்தது. எனினும், சவரன் விலை ரூ.82,000-க்கு நெருக்கமாகவே உள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சம் கண்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (13.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 குறைந்து ரூ.10,220 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 குறைந்து ரூ.81,760 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11,171 ஆகவும், சவரன் விலை ரூ.89,968 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (13.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.143 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,43,000 ஆகவும் புதிய உச்சத்தில் விற்பனை ஆகிறது.


தங்கம் விலை இனி?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.27 என்ற அளவில் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் எதிரொலியாகவே அடுத்தடுத்த வர்த்தக நாட்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,220 (ரூ.20 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,760 (ரூ.160 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,171 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,968 (மாற்றமில்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,220 (ரூ.20 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,760 (ரூ.160 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,171 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,968 (மாற்றமில்லை)


Edited by Induja Raghunathan