Gold Rate Chennai: மிஸ் பண்ணாதீங்க... தங்கம் விலை இன்றும் அதிரடி குறைவு!

11:18 AM Apr 08, 2025 | Jai s

ஆபரணத் தங்கத்தின் விலை நான்காவது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்துள்ளதால், இதுவே தங்கம் வாங்க சரியான நேரம் என்றும் கருதப்படுகிறது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 குறைந்து ரூ.8,285 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 குறைந்து ரூ.66,280 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.28 குறைந்து ரூ.9,038 ஆகவும், சவரன் விலை ரூ.224 குறைந்து ரூ.72,304 ஆகவும் இருந்தது. தற்போது, மேலும் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (8.4.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.8,225 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.65,800 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து ரூ.8,973 ஆகவும், சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.71,784 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (8.4.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,03,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கி வைத்த வரிவிதிப்பு யுத்தத்தின் எதிரொலியாக, சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் தடுமாற்றம் கண்டுள்ளன. எனினும், தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்துள்ளது.

உலக அளவில் மத்திய வங்கிகள் பலவும் வெளிநாடுகளில் வைத்திருந்த தங்கத்தை மீண்டும் தங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளன. பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடுகளும் குறைந்துள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. ஆனால், இந்தப் போக்கு நீடிக்காது என்றே வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தற்போது தங்கம் விலை குறைந்து வரும்போதே அதில் முதலீடு செய்வதுதான் சரியான முடிவு என்றும் பரிந்துரைக்கின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,225 (ரூ.60 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,800 (ரூ.480 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,973 (ரூ.64 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,784 (ரூ.520 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,225 (ரூ.60 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,800 (ரூ.480 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,973 (ரூ.64 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,784 (ரூ.520 குறைவு)


Edited by Induja Raghunathan