
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.9,160 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.73,280 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.9,993 ஆகவும், சவரன் விலை ரூ.79,944 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆனது.
தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று சற்றே குறைந்துள்ளது. கடந்த 5 வர்த்தக தினங்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,900 அளவில் குறைந்துள்ளது. எனினும், சவரன் விலை தற்போது ரூ.73,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. சுப காரியங்களுக்கு தேவையெனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (29.7.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.9,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.73,200 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.9,982 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.79,856 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (29.7.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.126 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,26,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
தங்கம் விலை இனி?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும், சர்வதேச அளவில் பொருளாதச் சூழலும் சற்றே தடுமாற்றம் கண்டுள்ளது. எனவே, தற்காலிகமாக தங்கம் விலை சற்று சரிந்தாலும், போகப் போக கூடுவதற்கே வாய்ப்பு அதிகம் என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,150 (ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,200 (ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,981 (ரூ.11 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.79,856 (ரூ.88 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,150 (ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,200 (ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,981 (ரூ.11 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.79,856 (ரூ.88 குறைவு)
Edited by Induja Raghunathan