Gold Rate Chennai: 1 சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.82,000-ஐ தாண்டியது தங்கம் விலை - இனி குறையா வாய்ப்பில்லையா?

11:32 AM Sep 16, 2025 | Jai s

கடந்த இரு தினங்களாக சற்றே குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி, நகை வாங்க விழைவோருக்கு ஷாக் தந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.10,210 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.81,680 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.11,138 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.89,104 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.560 அதிகரித்தது. சவரன் விலை தற்போது ரூ.82,000-ஐ கடந்துவிட்டது. வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் உயரவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று புதிய உச்சம் கண்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (16.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.10,280 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.82,240 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.11,215 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.89,720 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (16.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.144 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,44,000 ஆகவும் புதிய உச்சத்தில் விற்பனை ஆகிறது.


தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.11 என்ற அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், பங்குச் சந்தையிலும் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது. இதன் எதிரொலியாகவே தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,280 (ரூ.70 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.82,240 (ரூ.560 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,215 (ரூ.77 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,720 (ரூ.616 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,280 (ரூ.70 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.82,240 (ரூ.560 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,215 (ரூ.77 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,720 (ரூ.616 உயர்வு)


Edited by Induja Raghunathan