கடந்த வார இறுதிகளில் வெகுவாக குறைந்து வந்த ஆபரணத் தங்கம் விலை, இந்த வாரத்தின் முதல் நாளான இன்று மாற்றம் ஏதுமின்றி ‘அமைதி’ காத்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.9,160 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.73,280 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.9,993 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.79,944 ஆகவும் இருந்தது.
கடந்த வாரத்தின் கடைசி 3 தினங்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,800 அளவில் குறைந்தது. எனினும், சவரன் விலை ரூ.73,000-க்கு மேலாகவே நீடித்தது. இந்நிலையில், தற்போது தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லாதது, அடுத்தடுத்த நாட்களில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, புயலுக்குப் பிந்தைய அமைதியா அல்லது முந்தைய அமைதியா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (28.7.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.9,160 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.73,280 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.9,993 ஆகவும், சவரன் விலை ரூ.79,944 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (28.7.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.126 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,26,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை இனி?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதச் சூழலும் தடுமாற்றம் கண்டுள்ளது. எனவே, தங்கம் விலை இனி உயரவே வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,160 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,280 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,993 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.79,944 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,160 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,280 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,993 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.79,944 (மாற்றமில்லை)
Edited by Induja Raghunathan